Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2022 21:06:30 Hours

‘ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம்’ எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் 'ஆரோக்கியமான இராணுவம்-ஆரோக்கியமான தேசம்' எனும் திட்டத்தின் கீழ் ஷூம் வீடியோ தொழில்நுட்பத்தினூடாக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையகம், படைப்பிரிவு தலைமையகம் மற்றும் பிரிகேட் தலைமையகம் ஆகியவற்றில் புதன் கிழமை (27) சிறந்த சுகாதார நடைமுறைகள் முக்கியத்துவம் குறித்து படையினர்களுக்கு ஒரு விழிப்புணர்வு நடைபெற்றன.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பிளாஸ்டிக் மற்றும் மீள் சத்திரசிகிச்சை நிபுணர் கேணல் (டொக்டர்) ஜி.கே.ராஜபக்ஷ அவர்களினால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தடுப்பு முறைகள், சிறந்த சுகாதார பகுதிகள், உடல் தோரணைகள், புனரமைப்பு சத்திரசிகிச்சை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் கலந்துரையாடப்பட்டன.

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின்படி கொழும்பு இராணுவ வைத்தியசாலையானது படையினர்களுக்கு இடையில் ஏற்படும் நோய்கள் மற்றும் தொற்று நோய்களைக் குறைப்பதற்காக அவர்களின் தனிப்பட்ட சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்துவதற்கான விரிவான திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இந்த சுகாதாரக் நிகழ்வு 28 செப்டம்பர் 2022 வரை வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்படுகிறது.