Header

Sri Lanka Army

Defender of the Nation

26th July 2022 15:22:41 Hours

622 வது பிரிகேட் படையினர் லயன்ஸ் களகத்தின் அனுசரணையுடன் ஆசிரியர்களுக்கான விடுதி நிர்மாணிப்பு

அத்தனகல்ல லயன்ஸ் கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62 வது படைப் பிரிவின் 622 வது பிரிகேடின் படையினர், பதவிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஹெலம்பேவெவ ஆரம்பப் பாடசாலையில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதியினை பூரணப்படுத்தும் நிர்மாணப் பணிகளுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கினர்.

62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி மற்றும் 622 வது பிரிகேட் தளபதி கேணல் ஏனோஜ் ஹேரத் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் அத்தனகல்ல லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் சிறிது காலமாக பராமரிக்காமல் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யும் பணியை படையினர் மேற்கொண்டார்.

622 வது பிரிகேடின் 9 வது கஜபா படையணியின் படையினர் சில நாட்களுக்கு முன்னர் 9 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சேனக முனசிங்க அவர்களின் மேற்பார்வையில் புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவை ஏற்பாடு செய்தனர்.

622 வது பிரிகேட் தளபதியின் அழைப்பின் பேரில் லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநருடன் 622 வது பிரிகேட் தளபதி கேணல் நிஸ்ஸங்க கந்தனாரச்சி அவர்கள் இணைந்து, இந்த நிகழ்வில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தின் சாவிகளை பாடசாலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளிடம் கையளித்தார்.

விழாவின் இரண்டாம் பகுதியில் முறையே 50 பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் 46 மாணவர்களின் பெற்றோர்களுக்கான உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. வழங்கப்பட்ட பாடசாலை உபகரண பொதிகள் ஒவ்வொன்றும் ரூபா 3500/= பெறுமதியானதுடன் அப்பொதியில் பயிற்சிப் புத்தகங்கள், பென்சில்கள், பேனாக்கள், எழுது கருவிப் பெட்டிகள், சித்திர புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன.

அதேபோன்று, 46 பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு உலர் உணவுப் பொதிகளும் ரூபா 3000/= பெறுமதியானதுடன் மேற்குறித்த பொருட்களை வழங்குவதற்கான அனுசரணையானது லயன்ஸ் கழகத்தினால் வழங்கப்பட்டது.