Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2022 18:20:16 Hours

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மதிய உணவுப் பொதி விநியோகம்

561 வது பிரிகேட் படையினரின் சமூக திட்டங்களில் ஒன்றாக வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 561 வது பிரிகேட் படையினர் 400க்கும் மேற்பட்ட இலவச மதிய உணவுப் பொதிகளை பொதுமக்களுக்கு 2022 ஜூலை 13 ஆம் திகதி ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் சென்று வழங்கினர்.

56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமன் லியனகே அவர்களின் ஆசிர்வாதத்துடன் 561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்த உணவுப் பொதிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அர்பணிப்பில் அவர்களின் பங்குபற்றலில் விநியோகிக்கப்பட்டது.