Header

Sri Lanka Army

Defender of the Nation

01st July 2022 14:13:16 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் அனுசரணையாளரின் உதவியுடன் 400 பால்மா பொதிகள் விநியோகம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் மொனராகலை மாவட்ட படல்கும்புர பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வாவின் முயற்சியின் பேரில் இலவச பால் மா பொதிகள் வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க பொன்டெரா கம்பனி லிமிடடின் (Fonterra Company Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் திரு நிமல் கமகே இந்த திட்டத்திற்கான அனுசரணையை வழங்கினார். 400 பால் மா பொதிகளுக்கான விநியோக ஏற்பாடுகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி படையினரால் படல்குபுர நிஸ்ஸங்க தேசிய பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது அந்தந்த கிராம சேவை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் தகுதியான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டன.

பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற ஆரம்ப விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்கள் கலந்து கொண்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், 7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தின் இரண்டாம் கட்டளைத் அதிகாரி, படல்கும்புர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, படல்கும்புர நிஸ்ஸங்க தேசிய பாடசாலையின் அதிபர், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் இந்த திட்டத்தில் பங்குபற்றினர்.