Header

Sri Lanka Army

Defender of the Nation

30th June 2022 11:02:34 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தற்போதைய நிலைமை தொடர்பில் செயலமர்வு

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் எஸ். செனரத் யாப்பாவின் வழிகாட்டுதலின் கீழ் "இலங்கையில் வளங்கள் மற்றும் சேவைகளை நிலைநிறுத்துதல், பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் இலங்கை இராணுவம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் கருத்தரங்கை ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் கீழ் இராணுவம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இந்த கருத்தரங்கு இன்று (28) இலங்கை இராணுவத் தொண்டர் படையணி செயல்பாட்டு மண்டபத்தில் இராணுவ வீரர்களின் பங்கேற்புடனும் அதேவேளை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாகவும் ஆரம்பமானது. இந்நாளின் முதல் அமர்வை மின்சாரம் மற்றும் இயந்திரப் பொறியியலாளர் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே ஜயசேகர நடத்தினார்.

அவர் நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால பொருளாதார சவால்கள், முகாமைத்துவ நெருக்கடி, நெருக்கடி நிலைகளில் இராணுவ வீரர்களின் அணுகுமுறைகளை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றிய தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். , நெருக்கடியின் போது வழங்கல் பொறுப்பு மற்றும் SWOT எஸ்டப்ளியுஓடி பகுப்பாய்வு மூலம் திட்டங்களை எவ்வாறு அடைவது என்று விளக்கப்பட்டன.

பிரிகேடியர் வழங்கல் பிரிகேடியர் எஸ்.என்.ஏ.ஜே. ஆரியசேன, மற்றும் வழங்கல் கட்டளைகள் கேணல் நிர்வாகம் கேணல் டி.ஏ.சிறிமான்னகே, அதிகாரிகள் குழுவின் ஊடாக கருப்பொருள் தலைப்பு மற்றும் பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறை குறித்து இராணுவத்தினருக்கு விளக்கமளித்தனர்.

இறுதியாக, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியலாளர் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே.ஜெயசேகர அவர்கள் கொள்முதல் நடைமுறைகள் பற்றிய கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து, பிரிகேடியர் வழங்கல் பிரிகேடியர் எஸ்.என்.ஏ.ஜே. ஆரியசேன, மற்றும் வழங்கல் கட்டளைத் தளபதி கேணல் டி.ஏ. சிறிமான்னகே, ஆகியோர் முறையே செயலமர்வில் கலந்து கொண்டு கேள்விகளுக்குத் தீர்வு வழங்கினர்.