Header

Sri Lanka Army

Defender of the Nation

30th June 2022 13:02:34 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகம் 'பசுமை விவசாயம்' தொடர்பில் அரிய வகை மரக்கன்றுகள் நாட்டல்

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுப்பதையும், பசுமை விவசாயப் படையணியை உருவாக்கும் நோக்கத்துடனும் அதன் வீரர்களை பசுமை விவசாயப் படையினராக மாற்றுவதையும் இலக்காகக் கொண்டு, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகம், பயிர்ச் செய்கைக்குத் தயாராகும் நோக்கத்துடன் செவ்வாய்க்கிழமை (28) 2000 க்கும் அதிகமான அறிய வகை பழக்கன்றுகள் நாட்டப்பட்டன.

இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் சுப நிமிடத்தில் இந்நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முகமாக வளாகத்தில் முதலாவது இலுப்பை மரக்கன்றினை நாட்டி வைத்தார்.

சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் பேராசிரியர் நிமல் டி சில்வா மற்றும் பேராசிரியர் எம்.எஸ் மானவடு, கட்டடக்கலை மற்றும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், திரு. சன்ன ஏகநாயக்க மற்றும் திரு. தேவனா சல்காடோ ஆகியோர், இலங்கை இராணுவத் தொண்டர் படை தளபதியின் அழைப்பின் பேரில் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

அந்த நிபுணர்கள் முகாம் நிலப்பகுதியை உன்னிப்பாக ஆய்வு செய்து, ஏற்கனவே வறண்ட நீரோடைக்கு உயிர் கொடுக்கும் நோக்கத்துடன் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் இயற்கை நீர்நிலைகளை மீட்டெடுக்கும் வகையில் அரிய வகை மரங்கள் மற்றும் மரக்கன்றுகளை நடுவதற்கு மிகவும் பொருத்தமான இடங்களை தெரிவு செய்தனர்.

மின் மற்றும் இயந்திர பொறியியலாளர் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர, முதன்மை பதவி நிலை அதிகாரி பிரிகேடியர் பாலித கொடல்லவத்த, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி அனைத்து பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் சிப்பாய்கள் ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.