Header

Sri Lanka Army

Defender of the Nation

28th June 2022 16:24:52 Hours

விஜயபாகு காலாட்படை படையணி தலைமையகம் பசுமை விவசாயத்தில் பங்களிப்பு

இராணுவத்தின் பசுமை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், குருநாகல், போயகன விஜயபாகு காலாட்படை படையணியின் தலைமையகம் விஜயபாகு காலாட் படையணி படைத் தளபதியும் பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் குறுகிய கால மற்றும் பருவகால பயிர்கள் மற்றும் தானிய வகைகளை பயிரிட ஆரம்பித்தது.

இப்பயிர்ச் செய்கையில் பூசணி, முருங்கை, சிறகவரை, முள்ளங்கி, எலுமிச்சை, சோளம், இஞ்சி போன்றவற்றை உள்ளடக்கிய பயிர்ச்செய்கை 20 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

அத்துடன் 50 க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கலவையில் உள்ள பயிர்கள் விஜயபாகு காலாட்படை படையணியின் படையினர்களின் புதிய உணவாக சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும், மேலும் எஞ்சியவைகளை படையினர்களின் குடும்பங்களுக்கு எடுத்துச் செல்ல நியாயமான விலையில் விற்கப்படும்.

விஜயபாகு காலாட் படையணியின் பிரதி நிலைய தளபதி மற்றும் பல அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் திங்கட்கிழமை (27) பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது.