Header

Sri Lanka Army

Defender of the Nation

28th June 2022 16:21:32 Hours

இராணுவ பயிற்சி பாடசாலையின் சின்னங்கள் வழங்கும் நிகழ்வு

விசேட காலாட்படை நடவடிக்கைக் குழு பாடநெறி இலக்கம் – 76 ஐப் நிறைவு செய்தவர்களுக்கு சின்னங்கள் வழங்கும் நிகழ்வு ஜூன் 19 ஆம் திகதி மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் நஜீவ எதிரிசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

விசேட காலாட்படை நடவடிக்கைக் குழு பாடநெறி ஏப்ரல் 27 அன்று தொடங்கிய பாடநெறியில் 58 வது படைப்பிரிவின் 6 அதிகாரிகள் மற்றும் 189 சிப்பாய்களின் பங்கேற்புடன் 91 நாட்கள் நடத்தப்பட்டது. பொறியியல், முதலுதவி, சமிஞ்சை, வான்வழி ஒருங்கிணைப்பு, குறிபார்த்துச் சுடல், பீரங்கி பாவனை மற்றும் தந்திரோபாயம் எனும் ஏழு பிரிவின் கீழ் பாடநெறி முனடனெடுக்கப்பட்டது.

விசேட காலாட்படை நடவடிக்கைக் குழு பாடநெறி ஒரு சிப்பாய்க்கு எதிரியின் முன் உயிர்வாழும் வாய்பினை அளிக்கிறது.

பின்வரும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு சிறப்பு பரிசில்கள் வழங்கப்பட்டன:

சிறந்த அதிகாரியாக - கெப்டன் ஏ.எம்.ஆர்.கே.கே. முல்லேகம – முதலாவது இலங்கை சிங்க படையணி

சிறந்த சிப்பாய் - சார்ஜென்ட் ஆர்.ஏ.ஜி.சி ரணசிங்க –முதலாவது கெமுனு ஹேவா படையணி

சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் – சிப்பாய் ஆர்.ஜி.டி.என். பண்டார – 6 வது விஜயபாகு காலாட்படை படையணி

சிறந்த உடல் தகுதி வீரர் - லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.பி.யு கீர்த்தி குமார

சிறந்த பிரிவு

லெப்டினன் ஏ.எம்.டி.எம் அமரகோன் - முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி

கோப்ரல் ஜே.எம்.பி.எல் ஜெயவர்தன - முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி

லான்ஸ் கோப்ரல் எஸ்.எம்.ஜி.சி சிறிவர்தன - முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி

சிப்பாய் டி.எஸ் சந்தருவான் - முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி

சிப்பாய் கே.டபிள்யூ.ஜி.ஜி விஜேசூரிய - முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி

சிப்பாய் ஜே.எம்.எல்.எஸ் கருணாரத்ன - முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி

சிப்பாய் ஜே.எச்.கே.ஜெயலத் - முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி

சிப்பாய் பி.என்.எல் உதகெதர - முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி

சிப்பாய் எஸ்.எல்.சி செனவிரத்ன - முதலாவது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி