Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2022 14:15:11 Hours

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் வரிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் கனடாவைச் சேர்ந்த திரு ரஜிகரன் சண்முகரத்தினம் அவர்களின் அனுசரணையில் யாழ். குடாநாட்டில் குறைந்த வருமானம் பெறும் பாடசாலைக் மாணவர்களுக்கு ரூபா 500,000/= பெறுமதியான இருபத்தி இரண்டு துவிச் சக்கர வண்டிகள் மற்றும் வறுமையான குடும்பங்களுக்கு தலா ரூ. 5000/= பெறுமதியான 50 உலர் உணவுப் பொதிகள் ஞாயிற்றுக்கிழமை (26) பகிர்ந்தளிக்கப்பட்டன.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டலின் கீழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் தளபதியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விநியோக திட்டம் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. நன்கொடையாளர் திரு ரஜிகரன் சண்முகரத்தினம், மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டதோடு, 52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்களும் கலந்துகொண்டனர்.

523 வது பிரிகேட் படையினரால் சாவகச்சேரி பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலான பயனாளிகள் பாடசாலை சமூகம் மற்றும் அந்தந்த கிராம சேவை அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்களாவர்கள்.

இராணுவத்தின் மீதான பொது மக்களின் நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்தில் தமிழ் சமூக உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். திரு ரஜிகரன் சண்முகரத்தினம், குடாநாட்டில் இராணுவப் பணிகளைப் பாராட்டும் முகமாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வேண்டுகோளின் பேரில் இந்தத் திட்டத்திற்கு தனது அனுசரணையை வழங்கினார்.

பிரிகேட் தளபதிகள், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, தென்மராட்சி பிரதேச செயலக அதிகாரிகள், சாவகச்சேரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர், சிரேஷ்ட அதிகாரிகள், 52 வது படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 523 வது பிரிகேட் படையினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.