Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2022 14:55:58 Hours

நிராவிய இராணுவப் பண்ணையில் முதற்கட்ட சோளப் பயிர்ச்செய்கை ஆரம்பம்

அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் முழுமூச்சாக செயற்பட்டு வெற்றி கண்டுள்ள இலங்கை இராணுவத்தினால் தம்புத்தேகம நிராவிய இராணுவ பண்ணையில் இன்று (27) காலை முதற்கட்ட சோளப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

மொத்தமாக 500 ஏக்கர் பரப்பளவில் மேற்படி சோளப் பயிர்ச்செய்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டம் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற நிராவிய இராணுவ பண்ணையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களை விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ ராஜபக்ஷ அவர்களினால் பிரதம விருந்தினரை அழைத்து, சோளம் நாற்று மேடை பகுதி வேலைத்திட்டத்திற்கான பெயர் பலகையை திறந்து வைத்தார்.

நாடு முழுவதிலுமுள்ள நூற்றுக்கணக்கிலான இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியினர் கலா ஓயா ஆற்றின் நீர் ஆதாரத்துடன் பயிர்ச்செய்கையை மேற்கொள்வர். இது தொடர்பில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியவர்கள், தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பணிகளில் இராணுவத்தி்ன் பங்களிப்பு, தேசிய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கும் தேசிய இலக்குகளை எட்டுவதற்குமான பணிகளில் இராணுவத்தின் பங்களிப்புடன் தரிசு நிலங்களாக காணப்படும் 1000 ஏக்கருக்கும் அதிகமான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றன.

இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஶ்ரீரான் அபேசேகர, நிதி முகாமைத்துவம் பணிப்பகத்தின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், இராணுவ வழங்கல் தளபதி உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றினர்.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை இராணுவ கால்நடை மற்றும் விவசாய படையணியின் 6 படையலகுகள் உள்ள அரச காணிகளில் விவசாயத்தை மேற்கொள்ள உகந்த வகையில் மண்ணை பதப்படுத்துவதற்காக அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பக அதிகாரிகளின் வழிகாட்டலுடன் களையெடுத்தல், உழுதல் மற்றும் பாத்திகளை தயார் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் நாடளாவிய ரீதியில் 16 பண்ணைகள் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த தினமான 27 பிப்ரவரி 2022 அன்று, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நிராவிய பண்ணையில் 13,000 தென்னங் கன்றுகளை வளர்க்ககூடிய வகையில் விதைப் பயிரிடும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணிக்குச் சொந்தமான காணிகளை விவசாயம் மற்றும் கால்நடை நோக்கங்களுக்காக விரிவு படுத்தும் அதே வேளையில் அதன் கந்தகாடு, மெனிக் பண்ணை, வெல்லம்குளம், கல்கந்த, பலடுபன, ஆன்டியன்புளியங்குளம், பலல்ல நிராவிய பண்ணை ஆகியவற்றில் நெல், மரக்கறிகள், முட்டைகள் மற்றும் பல வகையான அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளதுடன் நிராவிய பண்ணையில், 'துரு மிதுரு-நவ ரடக்' எனும் திட்டத்தின் கீழ் நெற் செய்கை பாரிய அளவில் செய்யப்படுவதுடன் 1,000 ஏக்கர் தென்னை, 500 ஏக்கர் டீஈஜேசி மாம்பழம், 2000 ஏக்கர் மரமுந்திரி, 200 ஏக்கர் மிளகாய், 100,000 கோழிகளுடன் தயிர் மற்றும் முட்டை உற்பத்தி, உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உலர் உணவு பொருட்கள், உப்பு, தக்காளி சாஸ், மற்றும் சேதன பசளை பயன்படுத்தி 100,000 மஞ்சள் செய்கை என்பன தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

பிராந்திய மட்டத்தில் அரச காணிகளை அடையாளம் காண்பது சம்பந்தப்பட்ட ஆளுநர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் நெருக்கமான ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படவுள்ளது