Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2022 18:00:14 Hours

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை மாணவர்களுக்கு நிர்வாகம் தொடர்பான விளக்கம்

கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைப் பிரதேசத்தில் சேவையாற்றும் சிப்பாய்கள், கட்டளை அதிகாரிகள் மற்றும் அந்தந்த வழங்கள் பட்டாலியன்களின் பதவி நிலை அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து, மின்னேரியாவிற்கு வருகை தந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை பாடநெறி எண்: 16 இனை தொடரும் மாணவ அதிகாரிகளின் குழுவிற்கு அவர்களது நிர்வாகப் பாத்திரங்களை விளக்கினர்.

வழங்கள் பாடநெறி எண்: 8 இல் உள்ள இரண்டு வெளிநாட்டு அதிகாரிகளும் ஜூன் 7, 2022 அன்று குறித்த திட்டத்தில் இணைந்து கொண்டனர்.

குறிப்பிட்ட பிரதேச நிர்வாகப் பகுதிகளின் செயல்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து, வருகை தந்த பிரதிநிதிகள் குழுவிற்கு முன்பாக, அந்தந்த வழங்கள் படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பதவி நிலை அதிகாரிகள் இரு பாடப்பிரிவு மாணவர்களுக்கும் செயல்விளக்கம் அளித்தனர். இந்த செயல்விளக்கமானது கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைப் பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் மற்றும் இராணுவ வழங்கள் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஈஎம்எம் பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.