Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2022 17:30:14 Hours

இராணுவ பதவி நிலைப் பிரதானி ரணவிரு ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பு

அண்மையில் இராணுவ பதவி நிலைப் பிரதானியாக நியமிக்கப்பட்ட முன்னாள் ரணவிரு அப்பேரல் லிமிடெட் நிறுவன தலைவர் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு வியாழக்கிழமை (16) யக்கல ரணவிரு ஆடை தொழிற்சாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

வருகை தந்த இராணுவப் பதவி நிலைப் பிரதானியை ரணவிரு ஆடை தொழிற்சாலை தளபதி பிரிகேடியர் ஆசாத் இஸதீன், பிரதி தளபதி பிரிகேடியர் அமில வசகே ஆகியோரால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் அவருக்கு இராணுவ சம்பிரதாயங்களின்படி பாதுகாப்பு காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

இராணுவ பதவி நிலைப் பிரதானி ரணவிரு ஆடை தொழிற்சாலையில் உள்ள அனைத்து படையினர் மத்தியில் உரையாற்றியதோடு அந்நிறுவன வெற்றிக்கு வழிவகுத்த மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துப் படையினர் மற்றும் தளபதிக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அன்றைய நிகழ்வின் நிறைவம்சமாக, இராணுவ பதவி நிலைப் பிரதானி அதிதிகள் புத்தகத்தில் தனது வருகையின் நினைவாக சின்னமாக கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.