Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2022 15:59:25 Hours

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி பணியைத் தொடங்குகிறார்

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக நியமணம் பெற்றுள்ள இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள், வியாழக்கிழமை (16) இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.பௌத்த பிக்குகள் ‘செத்பிரித்’ பாடத் தொடங்கியதையடுத்து, மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய புதிய பதவியை ஏற்றுக்கொண்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர், அவர் துறவிகளுக்கு 'பிரிகாரா' மற்றும் 'கிலான்பாசா' வழங்கி அவர்களை வணங்கினார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கொஸ்கமவில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படைத் தலைமையக தளபதியாக பணியாற்றினார். பல மாதங்களுக்கு முன்னர் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதியாக பதவி வகித்தார்.இந்த நிகழ்வில் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் சுருக்கமான விவரம் இதோ;

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய 1968 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்தார் மற்றும் கொள்ளுப்பிட்டி மஹாநாம கல்லூரியில் கல்வி கற்றார், அங்கு அவர் விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார். அவர் 1986 இல் பயிலுநர் அதிகாரியாக இராணுவத்தில் சேர்ந்தார் மற்றும் 23 ஜூலை 1987 இல் 1 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியில் இரண்டாவது லெப்டினனாக நியமிக்கப்பட்டார். அவர் இராணுவ சேவையில் 35 வருடமாக சேவையாற்றுகின்றார்.

ஒவ்வொரு துறையிலும் படைப்பிரிவு நியமனங்களைத் தவிர, மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கட்டளை மற்றும் பணியாளர் திறன்களில் பல முக்கியமான நியமனங்களை வகித்துள்ளார். அவர் மிகவும் தீவிரமான எதிர்ப்பு கிளர்ச்சி நடவடிக்கைகளின் சகாப்தத்தில், இலங்கை இலகு காலாட்படை படைப்பிரிவின் 4 வது படைப்பிரிவின் புகழ்பெற்ற காலாட்படை பட்டாலியன்களில் ஒன்றிற்கு கட்டளையிட்டார்.பட்டாலியன் தளபதியாக பதவிக்காலத்தை நிறைவு செய்த அவர், 23வது படைப்பிரிவில் பதவி நிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), 58வது படைப் பிரிவில் கேணல் பதவி நிலை அதிகாரி, இலங்கை இலேசாயுத காலாட்படையணி தலைமையகத்தில் தலைமை பதவி நிலை அதிகாரி, உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை அவர் வகித்தார். இலங்கை இலேசாயுத காலாட்படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பிரிகேடியர் பொது பணி மற்றும் ஆட்சேர்ப்பு பணிப்பக பணிப்பாளர் உள்ளிட்ட நியமனங்களையும் வகித்தார்.

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய 512, 523 மற்றும் 663 காலாட்படை படைப்பிரிவுகளின் தளபதி, எயார் மொபைல் பிரிகேட் தளபதி மற்றும் திருகோணமலை 22 வது படைப் பிரிவின் தளபதி, மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதி உட்பட பல கட்டளை நியமனங்களைச் செய்துள்ளார். இலங்கை இராணுவத்தின் பிரதிப் பதவி நிலை பிரதானியாக கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியாக பணியாற்றினார்.

போர்க்களத்தில் எதிரிகளை எதிர்கொள்வதில் சிறந்து விளங்கிய விலைமதிப்பற்ற தன்னலமற்ற அர்ப்பணிப்பைப் பாராட்டி இந்த மூத்த அதிகாரிக்கு 'ரண விக்கிரம பட்டக்கமா' மற்றும் 'ரண சூரபடக்கமா' விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, அவர் பின்பற்றிய உள்ளூர் பாடநெறிகளுக்கு மேலதிகமாக, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் மோர்டார் பாடநெறி, பங்களாதேஷில் ஜூனியர் கட்டளைப் பாடநெறி, பங்களாதேஷில் ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் அதிகாரிகள் பாடநெறி மற்றும் இந்தியாவில் மூத்த கட்டளைப் பாடநெறி ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ‘இராணுவ வழிமுறைகளால் மோதல் தீர்வு’ மற்றும் மங்கோலியாவில் நடைபெற்ற ‘தெற்காசியா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு’ குறித்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டுள்ளார். மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பாடநெறியில் பட்டப்படிப்பைப் பெற்றுள்ளார்.

அவர் திருமதி தனுஷா வீரசூரியவை மணந்து ஒரு மகளினால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளார்.