Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2022 09:15:51 Hours

கனகராயன்குளம் பொதுமக்களுக்கு பெருமளவான உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு

இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 'பத்மஹன்ச' பொது சேவை திட்டத்தின் பணிப்பாளர், கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க இணைப்பாளர் திரு லொகு பாலசூரிய மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து கனகராயன்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு 10 ஜூன் 2021 அன்று உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளித்தனர்.

இத்திட்டம் 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமன் லியனகே அவர்களின் பணிபுரைக்கமைய, 561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. நிகழ்வின் பிரதம அதிதியாக 56 வது படைப்பிரிவு தளபதியவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, 561 வது பிரிகேட் தளபதி, 561 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.