Header

Sri Lanka Army

Defender of the Nation

08th June 2022 16:37:06 Hours

7 வது விஜயபாகு காலாட்படையணியினரால் கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்

சிவில்-இராணுவ உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது படைப் பிரிவின் 7 வது விஜயபாகு காலாட்படையணியின் படையினரின் ஏற்பாட்டில், சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள 25 வறிய கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆகியன 06 ஜூன் 2022 அன்று இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கான அனுசரணையினை 7 வது விஜயபாகு காலாட்படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் I.K.G.S.N பண்டார மற்றும் அனைத்து படையினரும் வழங்கினர். இந்த வேலைத்திட்டமானது யாழ்பாதுகாப்பு படைத் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், 52 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத் மற்றும் 523 வது பிரிகேட் தளபதி கேணல் சுபாஷ் சிறிவர்தன ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

சாவகச்சேரியில் உள்ள கலாசார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 52 வது படைப் பிரிவின் தளபதி மற்றும் சாவகச்சேரியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி (MOH) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு பயனளிக்கும் சமூகத் திட்டத்திற்கு குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் அந்தந்த கிராம சேவை அதிகாரிகளால் உதவி செய்யப்பட்டது. குறித்த உலர் உணவுப்பொதிகளின் மதிப்பு சுமார் ரூ.15,000.00. ஆகும்.

523 வது பிரிகேட் தளபதி, 52 வது படைப் பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், 523 வது பிரிகேட் தளபதி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்த சமூகத் திட்டத்தில் பங்குபற்றினர்.