Header

Sri Lanka Army

Defender of the Nation

29th March 2022 11:39:48 Hours

கூரகல வெசாக் விழா தொடர்பான கலந்துரையாடல்

எதிர்வரும் தேசிய வெசாக் விழாவினை கூரகல ரஜமஹா விகாரையிலும் மற்றும் தேசிய வெசாக் விழாவினை அரச மட்டத்திலும் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) காலை கொழும்பு 7 இல் உள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவலகத்தில் இடம்பெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

கூரகல ராஜ மகா விகாரை மற்றும் நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் பொறுப்பாளர் வண.வடுரகும்புரே தம்மரதன தேரர், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி அலுவலக பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க , இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, ஆளனி நிர்வாக பணிப்பக நாயகம் மேஜர் ஜெனரல் அனில் உதய குமார, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், மேலதிக செயலாளர் திருமதி அனோஜா பி குருகே, அரச அதிகாரிகள் மற்றும் பல மாகாண நிர்வாகிகள் அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கூரகல ராஜ மகா விகாரையில் இவ்வருட அரச வெசாக் விழாவை முறைப்படி நடத்துவது, அதன் புதிய கட்டிடத் திறப்பு விழா, மே 15 வெசாக் தின நிகழ்ச்சி, வெசாக் வாரம் (மே 15-22) மற்றும் புனித கலசம் எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான விவாதங்கள் கலந்துரையாடப்பட்டன.

புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிபாசனம் மற்றும் அதன் உலகளாவிய முக்கியத்துவம் ஆகியவற்றைக் குறிக்கும் முன்மொழியப்பட்ட தேசிய நிகழ்வினை நடத்துதல் தொடர்பாக கூரகல விகாராதிபதி வென் வதுரகும்புரே தம்மரதன தேரர் சுட்டிக் காட்டினார்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்துரையாடலில் பங்களித்ததுடன், அரச அனுசரணையுடன் தேசிய வெசாக் பண்டிகையின் முக்கியத்துவத்தையும் அனைத்து பங்குதாரர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார். கூரகலவில் தேசிய நிகழ்வு முதன்முறையாக நடைபெறுவதால் கூரகல அரச விழாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன தேசிய வெசாக் விழாவை நடத்துவதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பையும், விழாவை எவ்வாறு பெரிய அளவில் நடத்த முடியும் என்பது தொடர்பாக தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.