Header

Sri Lanka Army

Defender of the Nation

12th March 2022 06:08:28 Hours

இராணுவ ஜிம்னாஸ்டிக் போட்டியாளர்களுக்கு வண்ணமயமான பரிசளிப்பு விழாவில்

இராணுவ ஜிம்னாஸ்டிக் துறையில் சிறந்தவர்களின் சிறந்தவர்கள் – 2021 பரிகளிப்பு விழா இன்று (10) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைப்பெற்றது. விழாவில் தலைமை விருந்தினராக தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துக் கொண்டார்.

இராணுவ படையணிகளுக்கிடையிலான ஜிம்னாஸ்டிக் துறையில் புதியவர்கள் / சாம்பியன்ஷிப் போட்டி – 2021 பெப்ரவரி 22 மற்றும் 23 ம் திகதிகளில் இராணுவத்தின் ள 8 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 48 ஜிம்னாஸ்டி போட்டியாளர்களினால் அரங்கேற்றப்பட்டது.அனைத்து போட்டிச் சவால்ளையும் எதிர்கொண்டு கஜபா படையணி தசை ஜிம்னாஸ்டிக் புதியவர்கள் பிரிவில் சாம்பியன்ஷிப்பைப் பெற்றது. அதே நேரத்தில் இலங்கை பொறியியலாளர் படையணி ஜிம்னாஸ்டிக் அணி சாம்பியன்ஷிப்பைப் பெற்றனர்.இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ ஜிம்னாஸ்டிக் குழுவின் தலைவர் பிரிகேடியர் பிரதீப் கமகே ஆகியோர் அன்றைய பிரதம அதிதியை சிறப்பு மேடைக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் பிரதம அதிதி அங்கு பல கண்காட்சி சாதனைகள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களைக் கண்டுகளித்தார்.பின்னர் பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் போட்டியில் வெற்றிபெற்ற சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கினார்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே , பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் போட்டியில் சாதனையாளர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.பரிசளிப்பு விழாவின் முடிவில், அன்றைய பிரதம விருந்தினர் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இராணுவத்தின் அனைத்து ஜிம்னாஸ்டிக் வீரர்களுடனும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இலங்கை இராணுவ ஜிம்னாஸ்டிக் குழுவின் தலைவர் பிரிகேடியர் பிரதீப் கமகே ஆற்றிய நன்றியுரைடன் இந்த ஆண்டு போட்டிகள் நிறைவு பெற்றது. இப் பரிசளிப்பு விழாவில் இலங்கை இராணுவ ஜிம்னாஸ்டிக் குழுவின் உப தலைவர் கேணல் மங்கள பாலசூரிய வரவேற்புரையாற்றினார்.

இந்த நிகழ்வின் போது இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய,சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜிம்னாஸ்டிக் ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.