Header

Sri Lanka Army

Defender of the Nation

09th March 2022 21:03:15 Hours

இராணுவ வீரர்கள் புறா தீவில் இடிந்து விழுந்த தொங்கு பாலத்தை மீளமைக்கும் பணிகளில்

தொழிநுட்ப திறன்கள் மற்றும் தொழில்முறை திறன்களை வெளிப்படுத்தும் வகையில், மாத்தறை புறாத் தீவு ஸ்ரீ ரோஹண சங்க சபையின் உபோஷிதகராயக்கான சேதமடைந்த தொங்கு பாலம் தொடர்பான அவசர திருத்தப்பணிகளில் இராணுவத்தின் இலங்கை பொறியியலாளர் படையணியினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை பொறியியலாளர் படையணியினர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று, மாத்தறை புறா தீவுக்கான தற்காலிக மாற்று பாலத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர். இந்த பாலம் புறா தீவில் உள்ள விகாரைக்கு வருபவர்களின் நடமாட்டத்தை எளிதாக்குகிற வகையில் அமைந்துள்ளது.

இலங்கை பொறியியலாளர் படையணியின் 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு பதிலளிப்பு படையணி, 16 வது இலங்கை பொறியியலாளர் படையணி ஆகியவற்றின் நிபுணத்துவம் வாய்ந்த சிப்பாய்களின் உதவியுடன் 4 வது(தொ) பொறியியலாளர் சேவை படையணி, 12 வது பொறியியலாளர் சேவை படையணியின் படையினர்கள் மற்றும் சிப்பாய்கள், 613 வது பிரிகேட் சிப்பாய்கள் மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி ஆகியவை இணைந்து இந்த திட்டத்திற்கு பணியாளர்களாக பங்களிக்கின்றனர்.

பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, பொறியியலாளர் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன மற்றும் பொறியியலாளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அசங்க பெரேரா ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தற்காலிக பாலத்தின் சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.