Header

Sri Lanka Army

Defender of the Nation

10th March 2022 18:28:57 Hours

இந்தியா மேற்கு கடற்படைத் தளத்தின் தளபதி இராணுவ தளபதியை சந்திப்பு

தற்போது கொழும்பில் நங்கூரமிட்டுள்ள இந்தியா கடற்படையின் நவீன அந்தரங்க வழிகாட்டும் ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ் சென்னை கப்பலின் மேற்கு கடற்படைத்தளத்தின் தளபதி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா, என்எம் அவர்கள் இன்று காலை (10) பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை மரியாதை செலுத்தும் விதமாக இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான சுருக்கமான மற்றும் சுமூகமான சந்திப்பானது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளின் உறுப்பினர்களிடையே நிலவும் நட்பு உறவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்ட்து.

பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், இந்தியா கடற்படை பதவிநிலைப் பிரதானியுமானத் தளபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்படையின் ஒரு பகுதியாக ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா நாட்டிற்கு விஜயம் செய்ததை குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது தொடர்பான உங்கள் தொடர்ச்சியான கடல்சார் கண்காணிப்பு, இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவியுள்ளது, மேலும் இதுபோன்ற ஒத்துழைப்பு பிராந்தியத்தில் அண்டை நாடுகளாக இருக்கும் எங்களின் புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணத்தின் தற்போதைய பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துகிறது. எங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் இந்தியா கடலோரக் காவல்படையினரால் இலங்கை சகாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து ஆதரவுகளுக்கும் இந்தியாவின் கடற்படைத் தளபதி மற்றும் உங்கள் தெற்கு கட்டளைத் தளபதி ஆகிய இருவருக்கும் எனது உயர்வான வணக்கங்களையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் கூறினார்.

“அது மட்டுமல்லாமல், உங்கள் கடற்படையின் சிறந்த ஆதரவுடன் தொடங்கப்பட்ட வழக்கமான கடல்சார் பயிற்சிகள் மற்றும் வெளிப்பாடுகள், மீன்பிடியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிராந்தியம் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு பங்களித்துள்ளன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த பயங்கரவாதப் பிரச்சனையின் உச்சக்கட்டத்தில் இந்தியா கடற்படை எவ்வாறு இலங்கைக்கு ஆதரவளித்தது என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக இலங்கை போராடும் போது ஒருவேளை நீங்கள் மிகவும் இளம் அதிகாரியாக இருந்திருக்கலாம். மீனவ சமூகங்கள் தொடர்பான புரிதலுடனும் சரியான அணுகுமுறையுடனும் நடைமுறையில் இருக்கும் சிறு சிறு சம்பவங்களுக்கு நடைமுறை தீர்வுகளை காண்பதற்கு உங்களது குறுகிய காலம் உதவியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி குறிப்பிட்டனர்.

கடற்படை மற்றும் கடற்படை பேச்சுவார்த்தைகள், 'காலி உரையாடல்', இருதரப்பு கடற்படை பயிற்சிகள் போன்றவற்றில் தவறாமல் பங்கேற்பதன் மூலம் இந்தியா கடற்படை அதன் இலங்கை சகாக்களின் நெருங்கிய நண்பராக உள்ளது, அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்," என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்தியா கடற்படை அதிகாரியிடம் கூறினார்.

இதற்கு பதிலளித்த ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா, பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இலங்கையின் இராணுவப்படையைச் சேர்ந்த பலருக்கு இந்தியாவிலோ அல்லது துணைப் படையிலோ தொழில்சார் பயிற்சி நெறிகளைப் பின்பற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை கப்பல்துறையில் சில காலங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கரையோரக் கப்பல்களின் பாவனையை நினைவுகூர்ந்த அவர், அவற்றில் சில இன்னும் பயன்பாட்டில் உள்ளன, மேலும் இரண்டு நிறுவனங்களின் நலனுக்காக உற்பத்தி செயல்முறையை மீண்டும் தொடங்குமாறு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியிடம் கோரிக்கை விடுத்தார்.

ரியர் அட்மிரல் அஜய் கோச்சாரிடமிருந்து அதிகார கோலை பெற்ற ரியர் அட்மிரால் சமீர் சக்சேனா என்.எம். இந்திய கடற்படையில் புகழ்பெற்ற வரைப்படம் மற்றும் தட நிபுணர் ஆவார் இந்திய கடற்படையில் பல முக்கிய நியமனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

ரியர் அட்மிரால் சமீர் சக்சேனா இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு திட்டங்களை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இராணுவத் தளபதியிடம் தெரிவித்தார். உரையாடல்களின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா, ரியர் அட்மிரால் சமீர் சக்சேனா என்.எம்.க்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

இந்திய உயர் ஸ்தானி காரியாலத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் அசோக் ராவும் இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பில் கலந்து கொண்டார்.

ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், வெளியுறவு அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.