Header

Sri Lanka Army

Defender of the Nation

09th March 2022 21:02:15 Hours

இராணுவ தளபதி புதிய கிறிஸ்தவ பேராயர்க்கு மரியாதை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட சட்ட விரிவுரையாளரும் இலங்கை சட்டக்கல்லூரி விரிவுரையாளரும் கத்தோலிக்க சட்டத்தரணிகள் சங்கம் தலைவரும் மற்றும் இராணுவ கிறிஸ்தவ அமைப்பின் புதிதாக பதவியேற்றுள்ள பேராயருமான கலாநிதி நோல் டயல் அவர்கள் இன்று (9) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.

இந்த அமைப்பில் கிறிஸ்தவ விவகாரங்களுக்காக வருகை தந்திருந்த அருட்தந்தை (கலாநிதி) நோல் டயஸ் அவர்கள் இராணுவ தளபதியின் அலுவலகத்திற்கு அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் அங்கு சுமுகமான கருத்துப் பரிமாற்றமும் இடம் பெற்றது.

“இராணுவத்தின் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான புதிய அருட்தந்தையாக நீங்கள் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், அதே உணர்வுடன் இராணுவமும் உங்கள் மத நிறுவனங்களின் அல்லது சமூகத்தின் வளர்ச்சிக்கு எங்களின் அனைத்து ஆதரவையும் வழங்க தயாராகவுள்ளோம். இராணுவம் அதன் தொழில்முறை பொறியியல் வளங்களைக் கொண்டு தேவாலயங்கள் மற்றும் பிற மத நிறுவனங்களை புதுப்பிக்க எங்கள் நிபுணத்துவத்தை வழங்க எப்போதும் தயாராக உள்ளோம். இதன் மூலம் நமது நல்லுறவு மேலும் பலப்படுத்தப்படும். கட்டுமானங்கள் மற்றும் புனரமைப்புகளுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப ஆதரவுடன், மருத்துவ முகாம்கள், சுய உதவி திட்டங்கள், நிவாரண சேவைகள் போன்றவற்றின் மூலம் தேவாலயம் ஏற்பாடு செய்யக்கூடிய சமூக திட்டங்களுக்கு எங்கள் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். சுருக்கமான கோரிக்கையின் பேரில் நாட்டில் உள்ள அனைத்து மத நம்பிக்கைகளின் வளர்ச்சிக்கும் நமது மனிதவள நிபுணத்துவம் மற்றும் வளங்கள் கிடைக்கப்பெறலாம். இராணுவத்தில் உங்கள் புதிய இணைப்பு நிச்சயமாக இந்த விஷயத்தில் ஊக்கமளிக்கும்" என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

மத நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் உதவும் வகையில் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வெளிப்படையான உறுதிமொழிகளுக்காக அருட்தந்தை (கலாநிதி) நோயல் டயஸ் தனது அன்பான உணர்வுகளை வெளிப்படுத்தினார். மேலும் தேவாலயமும் அதன் எதிர்கால ஆன்மீக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இராணுவத்துடன் நெருக்கமாக பணியாற்ற முடியும் என்று அவர் கூறினார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ கிறிஸ்தவ அமைப்பிற்கான புதிய பாத்திரத்தையும் நுழைவையும் நன்றியுடன் ஒப்புக்கொண்டதுடன், தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அமைப்பில் அவரது ஆன்மீக பணிகளுக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

சந்திப்பின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது புதிய பணியில் இணைவிற்கு நினைவு சேர்த்து சிறப்புரை வழங்கியதுடன் அருட்தந்தை (கலாநிதி) நோயல் டயஸக்கு நினைவு பரிசு ஒன்றினையும் வழங்கினார்.

அருட்தந்தை (கலாநிதி) நோயல் டயஸ்க்கு முன்னர், பாப்டிஸ்ட் அசோசியேஷனைச் சேர்ந்த வண. ஹெஷான் டி சில்வா இராணுவ கிறிஸ்தவ சங்க ஆயராக பணியாற்றினார்.கடந்த காலங்களில், அமைப்பில் கிறிஸ்தவ விவகாரங்களை ஒருங்கிணைத்த ஆயர் வண. அருட் தந்தை (கலாநிதி) நோயல் நோயல் டயஸ், கிறிஸ்தவ நம்பிக்கையின் இராணுவ உறுப்பினர்களுக்கான மத சபைகளை நடத்துவதை ஆதரித்துள்ளார்.