Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd March 2022 19:57:52 Hours

பாகிஸ்தான் கடற்படைப் போர்க் கல்லூரி இளங்கலைப் பட்டதாரிகள் இராணுவத் தலைமையகத்திற்கு வருகை

இலங்கை கடற்படையின் அழைப்பையேற்று இலங்கைக்கான ஐந்து நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் கடற்படை போர் கல்லூரியில் பயிலும் இளங்கலை பட்டதாரிகளின் குழுவினர் தங்களது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக புதன்கிழமை (2) இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கொமடோர் சையத் அஹமட் ஓவைஸ் ஹைதர் ஜைதி எஸ்ஐ (எம்) தலைமையிலான 21 பேர் கொண்ட மேற்படி குழுவினருக்கு வரவேற்பளித்த பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கபில டோலகே அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

இதன்போது, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா சார்பாக இராணுவத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, கொமடோர் சையத் அஹமட் ஓவைஸ் ஹைதர் ஜைதி எஸ்ஐ (எம்) அவர்களுடன் பிரதிநிதிகள் குழுவை அவரது அலுவலகத்திற்கு வரவேற்றார்.

கலந்துரையாடலின், போது மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு இடையில் பல வருடங்களாக நிலவும் ஒத்துழைப்பைப் பாராட்டியதுடன், நிலவும் நட்புறவுகளையும் நல்லெண்ணப் தொடர்புகளையும் நினைவுகூர்ந்தார். மேலும் மேஜர் ஜெனரல் விகும் லியனகே, இலங்கை ஆயுதப் படைகளுக்கு பாகிஸ்தான் ஆயுதப் படைகளால் வழங்கப்பட்ட பயிற்சி ஒத்துழைப்பு, பரிமாற்ற நிகழ்ச்சிகளுக்கு வழங்கி பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

சிநேகபூர்வமான சந்திப்பின் நிறைவில் இராணுவ பதவி நிலை பிரதானி வரு தந்த குழுவினருக்கு சில நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்ததை தொடர்ந்து இலங்கையில் அவர்கள் தங்கியிருக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கபில டோலகே அவர்களினால் இலங்கை இராணுவத்தின் வரலாறு, அதன் சாதனைகள், தற்போதைய வகிபாகம் மற்றும் பணிகள் விளக்க காட்சிகளுடன் கூடிய விரிவுரையொன்று நிகழ்த்தப்பட்டது.

இந்த அமர்வில் பணிப்பாளர் பொது பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ரணவீர மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தான் கடற்படைப் போர்க் கல்லூரியில் 51 வது கடற்படைப் பணியாளர் பாடநெறியைத் தொடர்ந்து வரும் 21 முப்படைகளையும் சேர்ந்த மேற்படி குழுவில் பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். மேற்படி பாகிஸ்தான் கடற்படைப் போர்க் கல்லூரியின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மார்ச் 5 வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள். அவர்கள் இலங்கை கடற்படை தலைமையகம், இலங்கை விமானப்படை தலைமையகம், பாதுகாப்பு கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரி, கப்பல்துறை, கடற்படை அருங்காட்சியகம் மற்றும் கடற்படை கடல்சார் கல்வியற் கல்லூரி ஆகிய இடங்களை பார்வையிடுவதற்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.