Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2022 20:47:16 Hours

கல்கந்த விகாரை தூபியின் கட்டுமான பணிகளை தளபதியவர்கள் ஆராய்வு

புராதன மூதுர் பச்சனூர் கல்கந்த கொடியாராம ரஜமஹா விகாரையின் தலைமை தேரர் வண. பலல்லே ரதனசார தேரர் அவர்களின் அழைப்பின் பேரில் மூதுர் பச்சனூர் கல்கந்த கொடியாராம ரஜமஹா விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தூபியின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடும் நோக்குடன் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று (25) காலை விஜயம் செய்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் கபில குணவர்தனவின் ஒருங்கிணைப்புக்கமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின்படி 6 வது இலங்கை கவச வாகனப் படையணி மற்றும் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்கள், இலங்கை கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணியாளர்களும் இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இராணுவத் தளபதி அவர்களின் இந்த திடீர் விஜயத்தின் போது நிர்மானப் பணிகளை மேற்கொள்ளும் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

இவ்விஜயத்தின் போது, ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை விகாரையின் பிக்குவினால் தூபியின் அடித்தளத்திக்கு அடிக்கல் வைக்க அழைக்கப்பட்டார். பின்னர் இராணுவத் தளபதி கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சிப்பாய்களுடன் சில யோசனைகளைப் பகிர்ந்து கொண்டதுடன் அவர்களின் நலன்களை விசாரித்தார். கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்த பின்னர் இராணுவத் தளபதி புத்தர் சிலைக்கு காணிக்கைகளை செலுத்தினார். பின்னர் பிக்குகளுடன் கலந்துரையாடல் தொடங்குவதற்கு முன்பு வளாகத்தைச் சுற்றி பார்வையிட்டார்.

இராணுவத் தளபதி புறப்படுவதற்கு முன் விகாரையின் தலைமை தேரர் வண. பலல்லே ரதனசார தேரர் இராணுவத் தளபதியின் வருகையைப் பாராட்டி இராணுவத் தளபதிக்கு புத்தரின் ஆசீர்வாதங்களை வழங்கினார்.

நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் குரகல மடாலயத்தில் பணிபுரியும் வண. வத்துரகும்புரே தர்மரதன தேரர், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி, 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹார, அனைத்து பாதுகாப்பு இணைப்பாளர் மற்றும் 223 வது பிரிகேட் தளபதி கேணல் ரவீத்ர ஜயசிங்க ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.

கிழக்கு பயணத்தின் போது புனித சேருவில மங்களராம ரஜ மகா விகாரையின் தலைமை தேரர் வண. அலுதெனிய சுபோத தேரர் அவர்களின் அழைப்பின் பேரில் தளபதியவர்கள் குறித்த விகாரைக்கும் விஜயம் செய்தார்.