Header

Sri Lanka Army

Defender of the Nation

10th February 2022 10:50:47 Hours

மாவட்ட மட்டத்திலான “சேதன பசளை உற்பத்தி” செயற்பாடுகள் விறுவிறுப்புடன் ஒருங்கிணைப்பு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கமைய“மனிதாபிமானமிக்க இராணுவத்தினால்” முழுமூச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சேதன பசளை உற்பத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் வழமையான கலந்துரையாடல்கள் மற்றும் மீளாய்வு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் தொடர்பிலான அமர்வு கண்டி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்ஜீவ, சில பிரதேச செயலாளர்கள் ,111 வது பிரிகேட் தளபதி மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த அமர்வின் போது, 11 வது படைப்பிரிவு தளபதி மற்றும் கேணல் தம்மிக்க ரணதுங்க ஆகியோரால் இராணுவத்தின் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் தொடர்பான திட்டமிடலை அடிப்படையாக கொண்ட யோசனைகள் முன்மொழியப்பட்டன.

இதேவேளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கான இணைப்பாளர்களின் பங்கேற்புடன் இதேபோன்ற ஒருங்கிணைப்பு மாநாடுகள் பிந்துனுவெவவில் உள்ள சேவை மீளாய்வு நிறுவனங்களில் நடைபெற்றன.

மேற்படி மாவட்ட அடிப்படையிலான அனைத்து அமர்வுகளின் போதும் நடைமுறைச் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.