Header

Sri Lanka Army

Defender of the Nation

08th February 2022 19:00:32 Hours

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணித் தளபதி தனது படையணி தலைமையகத்திற்கு முதல் விஜயம்

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே குருணாகல் வேகர பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்திற்கான முதலாவது விஜயத்தை சனிக்கிழமை (06) மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் செஹான் குணவர்தன அவர்களினால் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் நுழைவாயில் வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனையடுத்து அவர் போரில் உயிர்நீத்த இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சிப்பாய்களின் நினைவுச் சின்னத்தில் மலர் மாலை அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே படையினருக்கு ஆற்றிய உரையின் போது படையணின் மேம்பாட்டிற்காக சகலரும் அரப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென தெரிவித்தார்.

இந்நிகழ்வில் படையணியின் நிர்வாக சபை உறுப்பினர்கள், படையணியின் பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் உரிய சுகாதார ஒழுங்குமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டிருந்தனர்.