Header

Sri Lanka Army

Defender of the Nation

25th January 2022 22:36:07 Hours

சேதன பசளை உற்பத்தியை மேற்கொள்ளும் அனைத்து தரப்புக்களையும் ஒருங்கிணைக்கும் பணிகள் முன்னெடுப்பு

யாழ். குடாநாட்டில் பசுமை விவசாய செயன்முறைக்காக சேதன உற்பத்தியை மேற்கொள்ளும் தரப்புக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் கிளிநொச்சியில் உள்ள பிரதேச விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய அதிகாரிகள் செவ்வாய்கிழமை (18) கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

அதேநேரம், மேற்படி விடயம் சார்ந்த விசேட ஒருங்கிணைப்பு மாநாடு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டலின் கீழ் அம்பாறையில் உள்ள 24வது படைப்பிரிவுபிரிவு வளாகத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்றது.

இந்த மாநாட்டில், பசுமை விவசாய செயன்முறைக்கு அவசியமான சேதன பசளை உற்பத்தி தொடர்பிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், அனைத்து உற்பத்தி தரப்புக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இந்த மாநாட்டில் 24 வது படைப்பிரிவு பணிநிலை அதிகாரிகள், சிப்பாய்கள், விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், 64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோனின் வழிகாட்டலுக்கமைய 643 பிரிகேட் தளபதியின் கண்காணிப்பின் கீழ், பசுமை விவசாயத்திற்கான சேதன பசளை உற்பத்தி தொடர்பிலான விஷேட செயலமர்வு 30 டிசம்பர் 2021 முல்லைத்தீவிலுள்ள விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன், முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு கோகுலதாசன் மற்றும் ஒட்டுசுட்டானில் உள்ள விவசாயப் பயிற்சி நிலையப் பண்ணையின் முகாமையாளர் ஆகியோரின் பங்கேற்பை தொடர்ந்து மேற்படி செயலமர்வு ஆரம்பமானது.

அதேபோன்று, பசுமை விவசாயத் திட்டத்திற்கமைய சேதன பசளை உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான மாநாடு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி 62 வது படைப்பிரிவின் 623 ஆவது பிரிகேடின் கீழுள்ள 5 வது (தொ) கஜபா படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேற்படி, கலந்துரையாடலில் விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாய சமூகங்களின் பிரதிநிதிகள் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு சவால்கள், உற்பத்தி செயன்முறைகள்,தேர்தெடுக்கப்பட்ட இடங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கிடைக்கும் தன்மை என்பன தொடர்பில் கலந்துரையாடினர்.

62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர, 623 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரொஹான் மெதகொட மற்றும் 622 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதேபோன்ற, மற்றுமொரு கலந்துரையாடல் கிளிநொச்சி விவசாய ஆராச்ய்சி மற்றும் அபிவிருத்தி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது. முல்லைத்தீவு - பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ், 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோர் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலுவலக பிரதி பணிப்பாளர் திரு.தேவாரந்தன், வடமாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.ஜெகதீஸ்வரி, 662 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுமிந்த தயாவன்ஷ, 66வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விவசாய சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.