Header

Sri Lanka Army

Defender of the Nation

19th January 2022 21:05:00 Hours

வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி சன்னதியில் புனித சின்னங்கள் பிரதிஷ்டை

புத்த பெருமான் வருகையால் புனிதப்படுத்தப்பட்ட பதினாறு பௌத்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான கிழக்கு பகுதியை தளமாக கொண்ட புராதன தீகவாபியவின் புனரமைப்பு பணிகள் “தீகவாபிய அருண” நிதியத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில் அதன் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அதன் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தாது மண்டபம் துருத்து போயா தினமான (17) பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன அவர்களினால திறந்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பாகவும் தினசரி வழிபாட்டிற்காகவும் வைக்கப்பட்டிருந்த தீகவாபிய தூபியின் புதிய அறையில் பிரதிஷ்டை செய்வதற்கான புனித சின்னங்கள் பிரதிஷ்டை செய்யப்படதற்கு முன்பாக கலாசார நிகழ்வுகள் மற்றும் மத சடங்குகள், அனுட்டானங்கள் என்பனவும் மகா சங்கித்தினரின் பங்கேற்புடன் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான (ஓய்வு) ஜெனரல் கமால் குணரத்ன அவர்களுடன் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, விவசாய அமைச்சின் செயலாளரும் அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான டீஎம்எல் பண்டாரநாயக்க, அம்பாறை மாவட்ட செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, விமானப் படை தளபதி, கடற்படை தளபதி, சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரும் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதேநேரம் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளால் பயாகல மலேகொட ஸ்ரீ புஷ்பராம விகாரையின் தலைமை தேரரின் ஆசிர்வாதத்துடன் உத்தேச பௌத்த விகாரையின் நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் சுப வேளையில் நாட்டி வைக்கப்பட்டது. மலேகொட நந்த தேரர் மற்றும் பல பிக்குகள், நா உயன மடாலயத்தின் தலைமை தேரர் வண. அங்குல்கமுவ அரியநந்த தேரர் மற்றும் அம்பாறை மகாவாபி விகாரையின் பிரதமகுருவான வண. கிரிந்திவெல சோமரத்ன தேரர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.

பாழடைந்த நிலையில் காணப்பட்ட தீகவாபிய புராதன வழிபாட்டு தளத்தின் மறுசீரமைப்பு பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு, பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய மஹாஓய சோபித தேரரின் கண்காணிப்பின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் “தீகவாபிய அருண” நிதியத்திற்கு உலளெங்கிலும் உள்ள பௌத்த நன்கொடையாளர்களிடமிருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, மேற்படி நிகழ்வு பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது.

தீகவாபிய விகாரையின் தலைமை தேரர் வண. மகாஓய சோபித தேரர் ஸ்ரீ சம்போதி விகாரையின் அம்பாறை மகாவாபி விகாரையின் விகாராதிபதியும் அம்பாறை மாவட்ட சங்க சபை பதிவாளருமான வண. கிரிந்திவெல சோமரதன தேரர் ஆகியோரும் மேற்படி வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.