Header

Sri Lanka Army

Defender of the Nation

08th January 2022 12:15:35 Hours

66 வது படைப்பிரிவின் பசுமை இல்லத்தில் சிறந்த விளைச்சல்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 66 ஆவது படைப்பிரிவு தலைமையகம் ஏற்கனவே முன்னெடுத்த பசுமை வீட்டுத் திட்டத்தில் வெற்றி கண்டுள்ள நிலையில் 300 தென்னங் கன்றுகள், 300 பலாக் கன்றுகள், 350 மருதக் கன்றுகள் மற்றும் 200 மிளகாய் செடிகள் (குடை மிளகாய்) என்பன திங்கட்கிழமை (3) முகாம் வளாகத்திற்குள் நாட்டப்பட்டன.

மேற்படி, நிகழ்வில் 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஜெனரல் சஞ்சய வணசிங்க கலந்துகொண்டார். இதன்போது முதன் முறையைாக சேதன பசளை திரவங்களை பயன்படுத்தி பயிரிடப்பட்ட கரி மிளகாய்களும் அறுவடை செய்யப்பட்டன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கமைய 66 வது படைப்பிரிவினால் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் பசுமை வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதேநேரம், 66 வது படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் பயிர்ச்செய்கைக்காக புதிய கரிம திரவ உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை 66 ஆவது படைப்பிரிவினர் அறிமுகப்படுத்தினர். இந்த பசுமை வீட்டு எண்ணக்கருவிற்கு அமைவாக அப்பகுதியை சார்ந்த விவசாயிகளும் பயனடைந்துள்ளனர்.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 66 வது படைப்பிரிவு தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.