Header

Sri Lanka Army

Defender of the Nation

07th January 2022 15:00:22 Hours

முல்லைத்தீவில் மேலும் சமூகம் சார் செயற்திட்டங்கள் ஆரம்பம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் நன்கொடையாளர்களின் அனுசரணையுடன், சமூக உதவி திட்டங்களை மேலும் செழுமைப்படுத்தும் வகையில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் பொறுப்பு பிரதேசத்தில் வசிக்கும் ஏழை சமூகத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் மூக்குகண்ணாடிகளை வழங்கியது.

நன்கொடையாளர் திரு பிரேகலித்த புஷ்பகுமார, மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ சீனி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு பிஸ்கட் பொதிகள் அடங்கிய 60 உலர் உணவுப் பொதிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்தார். 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 682 வது பிரிகேட் படையினரின் ஆதரவுடன் இந்த விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

682 வது பிரிகேட் தலைமையக வளாகத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அந்தப் பொதிகளை விநியோகித்தார்.

இந்த சமூக நல நிகழ்ச்சித் திட்டத்தின் போது பார்வை குறைப்பாடு உடையோர் மற்றும் பிற பார்வை பிரச்சினைகள் கொண்ட பொதுமக்களின் நலனுக்காக நடமா டு -ம் கண் மருத்துவ முகாமினை நடத்துவதற்கு அதே ஆதரவை படையினரால் வழங்க முடிந்தது. விஷன் கேர் பிரைவேட் லிமிடெட் மிகவும் தேவைப்பாடு உள்ளவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்குவதில் உதவி செய்தது. 682 வது பிரிகேட் படையினர் நடமாடும் கண் மருத்துவ சிகிச்சையில் கலந்துக்கொண்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளையும் உணவுகளையும் வழங்கினர்.

68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் வசந்த பாலமகும்புர, 682 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கலபத்தி, 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நளின் ஹெட்டியாராச்சி, சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குறித்த சமூக நல திட்டங்களை நடத்துவதற்கு ஆதரவளித்தனர்.