Header

Sri Lanka Army

Defender of the Nation

06th January 2022 05:49:40 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் முதல் நாள் பணிகள் ஆரம்பம்

கொஸ்கம இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் புதுவருடத் தினத்தில் முதல் நாள் பணி ஆரம்ப (ஜனவரி 3) அரசாங்க சத்திய பிரமாணம், கொடி ஏற்றல், தேசிய கீதம் பாடல் மற்றும் இராணுவ கீதத்தம் மற்றும் இராணுவத் தளபதியின் வாழ்த்து செய்தியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் தேசியக் கொடியும் இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்க அவர்களால் இராணுவத் தொண்டர் படையணி கொடியும் ஏற்றிவைக்கப்பட்டதுடன் தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைக்கப்பட்டது. அரசாங்க சத்திய பிரமாணம், வாசிக்கப்படுவதற்கு முன்னர் உயிரிழந்த போர்வீரர்களை நினைவு படுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், புதுவருடத் தினத்தை ஆரம்பிக்கும் நிமித்தம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் புதுவருட செய்தி படையினர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

அதற்கமைய படையினர்களுக்கு உரையாற்றிய இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி தாய்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தங்களால் இயன்றளவு பொறுப்புகளை நிறைவேற்றும் அதே வேளையில், இலங்கை இராணுவத்தின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பணியின் போது மிகவும் நம்பகமான சேவையை வழங்குவதன் மூலம் நாட்டின் நோக்கங்களை அடைவதற்காக அனைவரின் அர்ப்பணிப்பு தொடர்புலும் எடுத்துரைத்தார்.

அன்றைய நிகழ்வுடன் கொவிட் - 19 நோய் தொற்று இல்லாதொழிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் உட்பட சிவில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.