Header

Sri Lanka Army

Defender of the Nation

06th January 2022 05:48:45 Hours

பாதுகாப்பு படைத் தலைமையங்களில் சம்பிரதாய முறைப்படி பணிகள் ஆரம்பம்

பனாகொடை மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 2022 திங்கட்கிழமை (3) புதுவருட தினத்தை முன்னிட்டு தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைத்தலுடன் முதல் நாள் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களால் தேசிய கொடியேற்றப்பட்டது. பிரிகேடியர் பொது பணிப் பிரிகேடியர் ஆர்.டபிள்யூ.பொன்னம்பெரும ஆகியோருடன் தேசியக் கொடியும், இராணுவக் கொடியும் முறையே ஏற்றப்பட்டன.தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக உயிர்நீத்த அனைத்துப் போர்வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வின் முடிவில், கொவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பது தொடர்பாக இலங்கை இராணுவ வைத்திய படையணியின் கெப்டன் ஆர்.எம்.சி.எஸ்.ராஜபக்ஷ முக்கிய விரிவுரையை நிகழ்த்தினார். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்று நோய்க்கு முகங்கொடுத்து நாடு வேகமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது, 2021 ஆம் ஆண்டிற்குள் அனைத்து மக்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி ஏற்றிகொண்டனர். இரண்டாவது டோஸ் பெற்றவர்களுக்கு 'பூஸ்டர்' தடுபூசி விரைவாக ஏற்றப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய அபிவிருத்தி திட்டத்தில், காலநிலை மாற்றங்களுக்கு நிலையான தீர்வுகளுடன் கூடிய பசுமையான இலங்கையை உருவாக்குவதன் அடிப்படையில் இயற்கை விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க உற்பத்தி ஆற்றலை ஊக்குவிக்க நில நீர் மற்றும் சூரிய ஒளி ஊட்டப்பட்ட இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பன குறிப்பிடதக்கதாகும்.

இதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளான ஜனவரி 3 ஆம் திகதி (திங்கட்கிழமை) அனைத்து அரச ஊழியர்களின் பங்கேற்புடன் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அந்தவகையில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 2022 ஆம் ஆண்டின் முதல் நாள் கொடியேற்றத்துடன் நிகழ்வு ஆரம்பமானதுடன், மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் ஆர்.டபிள்யூ.பொன்னம்பெரும ஆகியோர் முறையே தேசிய கொடி மற்றும் இராணுவக் கொடியேற்றல், தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைக்கப்பட்டன. பின்னர் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக உயிர்நீத்த அனைத்துப் போர்வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர், அனைத்து படையினராலும் 'அரசாங்க ஊழியர்களுக்கன உறுதிமொழி' வழங்கப்பட்டது, பின்னர் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அனைத்து படையினர்களுக்கும் கடமைகளின் தன்மை, பசுமை விவசாயம், கொவிட் 19 தொற்றுநோய் சந்தர்பங்களில் எவ்வாறு செயல்படுவதன் முக்கியத்துவம் தொடர்பாக சில முக்கிய அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி அனைத்து நிலை வீரர்களுடனும் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில், இலங்கை இராணுவ வைத்தியக் குழுவின் கெப்டன் ஆர்.எம்.சி.எஸ்.ராஜபக்ஷ அவர்கள், கொவிட்-19 தொற்று நோயை தடுப்பது எவ்வாறு என்று விரிவுரையை நிகழ்த்தினார். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோர் சுகாதாரத் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதேவேளை, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் திங்கட்கிழமை (3) முதல் நாள் பணி சம்பிரதாய முறைகளுடன் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களின் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.

பின்னர் தேசியக் கொடி, இராணுவக் கொடியேற்றல் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கொடியேற்றுதல் ஆகியவற்றுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவப் பாடல் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இராணுவத் தளபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி படையினர் மத்தியில் வாசிப்பதற்கு முன்னர் அரசாங்க சத்திய பிரமாணம் வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்கள், புத்தாண்டில் மிக உயர்ந்த ஒழுக்கம் மற்றும் நிபுணத்துவத்தை பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றினார்.

மேலும், அரசாங்கத்தின் சேதனை பசளை உற்பத்திச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கிழக்குத் தளபதி, அதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்துப் படையணிகளிலும் உள்ள அனைவரின் ஆதரவையும் கோரினார்.

சம்பிரதாயங்களுக்குப் பிறகு, நிகழ்வுகள் முடிவடைவதற்கு முன், கொவிட்-19 நோய் தொற்று தொடர்பாக முறையான விழிப்புணர்வு விரிவுரை நடத்தப்பட்டது. இதற்கிடையில், இராணுவத் தலைமையகத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கொடி ஏற்றல், தேசிய கீதம் மற்றும் இராணுவப் கீதம் இசைத்தல், வீரமரணம் அடைந்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துதல், அரசாங்க சத்திய பிரமாணம் வாசித்தல் மற்றும் தளபதியின் புத்தாண்டு செய்தி போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள புதிய பொறுப்புகளை கருத்தில் கொண்டு புத்தாண்டில் நாட்டிற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுமாறு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினருக்கு வலியுறுத்தினார். அமைப்பின் கண்ணியத்தை எப்பொழுதும் பாதுகாக்கும் அதே வேளையில், மிக உயர்ந்த ஒழுக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் அவர் படையினருக்கு நினைவுபடுத்தினார். மேலும், அரசாங்கத்தின் சேதனை பசளை உற்பத்தி செயல்முறையின் வெற்றிக்கு நமது அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை தளபதி எடுத்துரைத்தார்.

தே நீர் விருந்துபசாரத்தின் பின்னர், கொவிட்-19 தொற்று நோய் தடுப்பிற்கான வழிமுறை தொடர்பாக படையினர்களுக்கு விரிவுரை வழங்கப்பட்டது.