Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2022 18:16:05 Hours

பிரிகேடியர் பண்டுக பெரேராவிற்கு இராணுவ மரியாதையுடன் இறுதிக்கிரியைகள்

முல்லேரிய தொற்று நோய் வைத்தியசாலையில் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (31) ஆம் திகதி காலஞ்சென்ற வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 563 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேரா அவர்களின் இறுதிக்கிரியைகள் எல்தெனிய மயான பூமியில் (3) ஆம் திகதி பிற்பகல் அவரது நெருங்கிய இராணுவ சகாக்கள், குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடல் மத்தியில் இராணுவ மரியாதையுடன் இடம் பெற்றன.

இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் இந்த இராணுவ இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதுடன் இலங்கை சிங்கப் படையணியின் தளபதியும் மற்றும் மேற்குப் பாதுகாப்புப் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே உட்பட மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.

காலாட்படை வீரராக பிரிகேடியர் பண்டுக பெரேரா, 1990 நவம்பர் 3 ஆம் திகதி பயிலுனர் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்து, 'ஜய சிகுரு', 'ரிவிரேச', 'எடிபல', 'கினிஹிர', 'அக்னிகீல' மற்றும் வன்னி மனிதாபிமான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கியமான மனிதாபிமானமான நடவடிக்கைகளில் தனது முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இலங்கை சிங்கப் படையணியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகளுக்கு அவர் ஊக்கம் மற்றும் உத்வேகத்தின் பாத்திரமாக திகழ்ந்தார் என்று பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட பகுதி 1 கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ மரபுகளின்படி அவரது பூதவுடல் துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு தேசியக் கொடியினால் போர்த்தப்பட்டு இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், மூத்த அதிகாரிகளின் பிரதிநிதிகள் பூதவுடல்பெட்டியை முறைப்படி பெற்றுக்கொண்டு சென்றதுடன் குடும்ப உறுப்பினர்கள் பின்னால் அணிவகுத்து மயானத்தை நோக்கிச் சென்றனர்.

இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ விசேட பகுதி I கட்டளையானது அவ்விடத்தில் துக்கத்தில் இருந்தவர்களுக்கு மத்தியில் வாசிக்கப்பட்டதுடன் இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர் ஒரு இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலியான அடையாள துப்பாக்கி மரியாதையின் மூலம் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இறந்தவர் தனது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி அழைப்பு விடுக்கப்பட்ட சில நிமிடங்களில் அவரது பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர், மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல மற்றும் மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே ஆகியோர் இணைந்து பிரிகேடியர் பண்டுக பெரேரா தனது புகழ்பெற்ற வாழ்க்கையின் போது, ஒரு பொதுவான பாரம்பரியம், இராணுவப் பயிற்சியின் போது பெற்ற அணிகலன்கள் மற்றும் பதக்கங்களை இழந்த குடும்பங்களுக்கு வழங்கினர்.

பிரிகேடியர் பண்டுக பெரேராவின் மறைவு தொடர்பாக பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட பகுதி I கட்டளையின் முழு உரை பின்வருமாறு;