Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2021 21:15:39 Hours

யாழ். கட்டளை அதிகாரிகளுக்கு அறிவை மேம்படுத்த இரண்டு நாள் பட்டறை

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் 31 கட்டளை அதிகாரிகள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பதவி நிலை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கட்டளைப் பொறுப்புகள்' என்ற தலைப்பில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கட்டளை அதிகாரிகளின் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் டிசம்பர் 30-31 திகதியில் கொவிட் -19 சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி கலந்து கொண்டனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனரத்யப்பா அவர்களின் பணிப்புரையின் பேரில் அனைத்து கட்டளை அதிகாரிகளுக்கும் கட்டளைப் பொறுப்புகள் மற்றும் அறிவுசார் பண்புகளை மேம்படுத்துதல் பற்றிய அறிவு மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இச் செயலமர்வு அவர்களின் புரிந்துணர்வினையும் செயல்பாட்டுச் சூழல்களை பகுப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கான திறனையும், தங்கள் கடமைப் பாத்திரங்களின் செயல்திறனில் அவர்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகளுக்கு தர்க்கரீதியாக தீர்வுகளை அடையும் போது செயல்பாட்டு செயல்முறைகளைச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

இவ் இரண்டு நாள் செயலமர்வு மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா தலைமையில் நடைபெற்றதுடன், கட்டளை அதிகாரிகளின் கட்டளைப் பொறுப்புகள் மற்றும் பொறுப்புகள், சமூக ஊடகங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் அதன் தாக்கம், மக்களுடன் பணிபுரியும் கலை, மற்றும் அதிகாரி நிபுணத்துவம் இலங்கை இராணுவத்தின் முன்னோக்கிய வியுகம் 2020 - 2025', பட்டாலியன்களின் செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் கட்டளைப் பொறுப்புகள் தொடர்பான ஆய்வு போன்ற முக்கிய தலைப்புகள் உள்ளடக்கப்பட்டன.

இந்த செயலமர்வில் குழு விவாதங்கள், தொடர் சொற்பொழிவுகள், உணவக கலந்துரையாடல் மற்றும் குழு விவாதங்கள் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் பட்டறைகளின் போது, பட்டாலியன்களின் கட்டளை அதிகாரிகள் விரிவான விளக்கங்கள், வல்லுனர்களின் அனுபவங்கள் மற்றும் மேலே கூறப்பட்ட பாடப் பகுதிகள் தொடர்பான விலைமதிப்பற்ற அறிவைப் பெற்றனர்.

51, 52 மற்றும் 55 வது படை பிரிவுகளின் தளபதிகள், முன்னோக்கு பராமரிப்பு பிரதேச தளபதி (வடக்கு), பிரிகேட் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த செயலமர்வினை இணையவழிமூலமாக பார்வையிட்டனர்.