Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2021 22:00:39 Hours

14 வது கெமுனு ஹேவா படையினர் 'சிரசநிவாச' திட்டத்தில் எழை குடும்பத்திற்கு மேலும் ஒரு வீடு நிர்மாணிப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 14 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் 613 வது பிரிகேட்டின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இமதுவ, வத்தவன ஏழை குடும்பத்திற்கு ஒரு புதிய வீட்டை நிர்மாணித்தனர். எம்.டி.வி/எம்.பி.சி 'சிரச' ஊடக வலையமைப்பு தனது 'சிரசநிவாச' திட்டத்தின் ஊடாக இதற்கான அனுசரனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கான கட்டுமான செலவுகளை குறைப்பதற்காக இராணுவ ஆளணிபலத்தையும் அவர்களின் கட்டுமானத் திறமைகளையும் பெற்றுக் கொள்வதற்காக அனுசரணையாளர்கள் இராணுவத் தளபதியிடம் உதவிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் வறுமையில் வாழும் திரு. எஸ்.பி. ஜாலிய நிஷ்ஷங்கவின் வாழ்க்கை நிலைமையினை அனுசரணையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'சிரசநிவாச' திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நிதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே வழங்கிய திறமையான தொழில்நுட்ப மற்றும் ஆளணி உதவியினால் திட்டமிட்டபடி இத்திட்டத்தை நிறைவு செய்ய முடிந்தது. 61 வது படைப்பிரிவின் தளபதியின் நெருங்கிய ஒருங்கிணைப்பில் 14 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் இவ்வீடு நிர்மாணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி சார்பாக 61 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண பொத்தொட்ட அவர்கள் பிரதம அதிதியாகவும் கெப்பிட்டல் மஹாராஜா அமைப்பின் இலத்திரனியல் ஊடகப் குழுமப் பணிப்பாளர் திருமதி நீத்ரா வீரசிங்க அவர்களுடன் புதன்கிழமை (29) திகதி 'சிரசநிவாச' நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

அன்றைய பிரதம அதிதியும் அனுசரணையாளர்களும் சுப வேளையில் பெயர் பதாகை திரை நீக்கம் செய்து, பழங்கால மரபுகளின் படி பயனாளிகளுடன் விளக்கு ஏற்றி வைத்தனர். அதே போன்று, பிரதம அதிதியும் பங்கேற்பாளர்களும் பயனாளிகளுக்கு பல வீட்டுப் பரிசுகளையும் வழங்கினர்.

இந்த நிகழ்வில் சிரச ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க, சிரச எப்.எம் அலைவரிசை பிரதானி திரு. சஜித் ரத்நாயக்க, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் திட்ட அதிகாரி பிரிகேடியர் துஷான் கனேபொல, 613 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் உபுல்கொடிதுவக்கு 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணிகட்டளை அதிகாரி ஆகியவை கலந்துகொண்டதுடன் 61 வது படைப்பிரிவு மற்றும் 613 வது பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், "சிரச" ஊடக அதிகாரிகள், பயனாளி குடும்ப உறவினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களின் படி இத் திட்டத்தின் ஒட்டுமொத்த செலவைக் குறைப்பதற்காக மனிதவளம், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆதரவைப் பெறுவதற்கும், இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமீப காலமாக அனுசரணையாளர்கள் இராணுவத்துடன் தொடர்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கதான விடயமாகும்