Header

Sri Lanka Army

Defender of the Nation

29th December 2021 12:18:06 Hours

சிவநகர் அனாதை இல்ல பிள்ளைகளுக்கு பண்டிகைக் கால பரிசுகள்

66 வது படைப்பிரிவின் தலைமையகத்தின் 662 வது பிரிகேட் படையினர் சிவநகர் 'அரோபனன்' மற்றும் “புனித குடும்பம்” சிறுவர் இல்லங்களில் வசிக்கும் அனாதை சிறார்களுக்கு வியாழன் (23) அன்று உயர்தர மதிய உணவு உபசரிப்புடன் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக திருமதி A. கமலாவதி மற்றும் திருமதி டி ஜி திலானி மல்காந்தி ஆகியோரின் அனுசரனையில் 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் படி 662 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.எம்.எல்.எஸ்.தயவன்ச தலைமையிலான 662 வது பிரிகேட் படையினர் மற்றும் 20 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்விரு அனாதை இல்லங்களின் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன், 66 வது படைப்பிரிவின் 662 வது பிரிகேடின் அதிகார எல்லையின் சிவில் சமூகத்தினரிடையே ஒத்துழைப்பையும் நன்மதிப்பையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த சமூக சார் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

20 வது இலங்கை இலேசாயுத காலாட்படையின் இராணுவ கெலிப்சோ இசைக்குழு வழங்கிய கிறிஸ்துமஸ் கரோல் பாடல்கள் நிகழ்ச்சி முழுவதும் இசைக்கப்பட்டன. மேலும் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஐ.கே.ஏ.சி.குமார, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

இந்த நிகழ்வு அரச சுகாதார வழிக்காட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டது.