Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2021 11:38:16 Hours

அரச சார்பற்ற நிறுவன உதவியுடன் 141 வது பிரிகேடினரால் திவுலபிட்டிய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 141 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரியின் ஒருங்கிணைப்பில் 'செவனக் வெமு' அரச சார்பற்ற நிறுவனத்தினால் திவுலபிட்டிய - ஹால்பே ஏகநாயக்க கல்லூரி வளாகத்தில் திங்கட்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கற்றல் உபகரணங்கள், புத்தக பைகள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் 50 வறிய மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

141 வது பிரிகேடி வளாகத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு, இத்திட்டமானது இராணுவத்தின் “முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025” இற்கு அமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 14 வது படைப்பிரிவு தளபதி ஆகியோரின் ஆசிர்வாதங்களோடு 141 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக கிடைக்கப்பெற்ற நன்கொடையின் மொத்த பெறுமதி 1,56,000.00 ரூபாய் என்பதோடு, மேற்படி நிகழ்வில் 141 வது பிரிகேட் தளபதியும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.