Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2021 17:40:31 Hours

இராணுவ ஒருங்கிணைப்பின் மூலம் வாகரையில் ஐந்து பாடசாலைகளின் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

கிழக்குப் படைத் தலைமையகத்தின் 23 வது படைத் தலைமையகத்தின் 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் வாகரை பிரதேசத்திலுள்ள 100 ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்கத்தொகையாகப் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நன்கொடையளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 233 வது பிரிகேட் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

வசதி குறைந்த பாடசாலைகளில் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் இந்த முயற்சியானது இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூகம் சார்ந்த நலன்புரி நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப நடத்தப்பட்டது. கிழக்கு பாதுகாப்பு படைதலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்ரசிறி பிரதம அதிதியாக செவ்வாய்க்கிழமை (21) அப்பகுதிக்கு தனது முதல் களப்பயணத்தின் போது அந்த பரிசுப் பொதிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

233 வது பிரிகேட் தளபதி மற்றும் படையினர் பாடசாலை அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் இந்த நற்பணி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்தவும் இந்த விநியோகத்தில் கலந்துகொண்டார்.

வாகரை மகா வித்தியாலயம், ஊறியங்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, தட்டுமுனை விநாயகர் வித்தியாலயம், கண்டலடி அருந்ததி வித்தியாலயம், பணிச்சரேணி திருமகள் வித்தியாலயம் ஆகிய பொருளாதாரக் கஷ்டங்களை கொண்ட பாடசாலை மாணவர்கள் இத் திட்டத்தில் பயனடைந்தார்கள்.