Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2021 13:17:31 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி கட்டளை அலகுகளுக்கு விஜயம்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதியான அண்மையில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்கள் வாகரையில் உள்ள 233 வது பிரிகேடின் தலைமையகம் மற்றும் நாவலடி 6 வது கஜபா படையணி என்பவற்றுக்கு செவ்வாய்க்கிழமை (21) முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அதற்கமைய முதலில் கதிரவெளியில் அமைந்துள்ள 6 வது கஜபா படையணியின் ஏ கம்பனிக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததோடு, அங்குள்ள நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் படையினருக்கான நலன்புரிச் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆராய்ந்தார். இதன்போது 233 பிரிகேட் தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த மற்றும் 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைடுத்து, பிரிகேட் வளாகத்திற்குள் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த தளபதி, குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

அதனையடுத்து கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் கட்டளை அலகுகளின் படையினரின் நலன்புரி தேவைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதன் பின்னர் விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

அதனை தொடர்ந்து நாவலடியில் உள்ள 6 வது கஜபா படையணியின் தலைமையகத்திற்கு தளபதிக்கு சம்பிரதாயூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதோடு, அங்குள்ள அதிகாரிகள் மற்றும சிப்பாய்களுடனும் கலந்துரையாடினார். இதன்போதும் படையினரின் நலன்புரி தேவைகள் மற்றும் நடைமுறைத் தேவைப்பாடுகள் என்பன குறித்தும் கேட்டறிந்துகொள்ளும் வாய்ப்பு தளபதியவர்களுக்கு கிடைத்தது.