Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2021 13:54:57 Hours

121 பிரிகேடின் ஒருங்கிணைப்பில் மொனராகலையில் வறிய மாணவர்களுக்கு உதவி

ஹம்பாந்தோட்டை 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேடிற்கு நன்கொடையாளரான சட்டத்தரணி ரசிக்க திஸாநாயக்க அவர்கள் வழங்கிய நிதி உதவியை கொண்டு, மொனராகலை வத்தேகம பகுதியிலுள்ள சிறிமல் கனிஷ்ட பாடசாலையில் பயிலும் 107 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளுக்கு அவசியமான பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

மொனராகலையில் உள்ள மேற்படி பாடசாலையில் குறை வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களை தெரிவு செய்து மேற்படி உபகரணங்கள் சனிக்கிழமை (18) வழங்கி வைக்கப்பட்டன. 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களின் ஒருங்கிணைப்பின் ஊடாக 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய சேரசிங்கவினால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்பளிப்புச் செய்யப்பட்ட பொதிகளில் காலணிகள், பாடசாலை புத்தக பைகள், தண்ணீர் போத்தல்கள், மதிய உணவு பெட்டிகள், அப்பியாச புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், ஏ-4 தாள்கள், எழுதுவினை பொருட்கள் மற்றும் சில தொழில்நுட்ப பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.