Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2021 19:20:45 Hours

தென் சூடான் சிறிமெட் தரம் 2 வைத்தியசாலையின் 7 வது குழுவின் பணிக்காலம் நிறைவு

தென் சூடானில் ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காகச் சென்றிருந்த சிறிமெட் தரம் – 2 வைத்தியசாலையில் ஒரு வருட சேவைக்காலத்தை நிறைவு செய்துள்ள 7 வது குழுவினரால் வௌ்ளிக்கிழமை (17) படைமுகாம் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

சிறிமெட் தரம் – 2 வைத்திய குழுவினர் அவர்களது ஒரு வருட பதவிக் காலத்தில் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் 1395 நோயாளிகளுக்கும் , வார்ட்டுகளில் தங்கிருந்த 171 நோயாளிகளுக்கும் மற்றும் பல் மருத்துவப் பிரிவில் 314 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் 48 அருவை சிகிச்சைகள் மற்றும் 22 முதலுதவி செயற்பாடுகள் என்பனவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், படைமுகாமின் தளபதி கேணல் டி.ஆர்.எஸ்.ஏ.ஜெயமான்னஅவர்கள் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக்கொண்டதோடு, மேற்படி அணிவகுப்பு மரியாதைக்கு மேஜர் டபிள்யூ.ஜி.எல் ஜயரத்ன கட்டளை அதிகாரியாக இருந்ததுடன் இரண்டாம் கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம்.எஸ்.டி குலதுங்க அவர்கள் செயற்பட்டதுடன் நிறுவன சார்ஜென்ட் மேஜராக ஆர்.எச்.கே.எச் அமரசூரிய அவர்களும் அணிநடை பயிற்றுவிப்பாளராக அதிகாரவாணையற்ற அதிகாரி II எஸ்.பி.டபிள்யூ பிரேமச்சந்திரவும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் படைமுகாம் தளபதியவர்கள் நிகழ்த்திய உரையின் போது, சிறிமெட் தரம் 2 மருத்துவமனையின் சுமூகமான செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு மற்றும் ஏனைய ஐ.நா. பணியாளர்களுடான சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கான அனைத்து படையினரின் அர்ப்பணிப்புக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். பொது வைத்திய ஆலோசகர் கேணல் ஆர்.கே.பி புஷ்பகுமார, மயக்க மருத்துவ நிபுணர் கேணல் யு.ஏ.எல்.டி பெரேரா, எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் லெப்டினன்ட் கேணல் திலக் விஜேரத்ன மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் லெப்டினன்ட் கேணல் நவரத்னம் ஜெயந்தன் ஆகியோரின் தரமான பங்களிப்பையும் பாராட்டினார். அதேநேரம் ஐக்கிய நாடுகளின் தரம் 2 மருத்துவமனையில் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் பரமரிப்பு தரம் என்பவற்றிற்கும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் இங்கு இடம் பெற்ற மர நடுகை நிகழ்ச்சி ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதற்கான விருந்துபசாரம் என்பவற்றுடன் மேற்படி நிகழ்வு நிறைவு கண்டது.