Header

Sri Lanka Army

Defender of the Nation

21st December 2021 10:20:42 Hours

விமானப்படையினரின் பல்வேறு நிகழ்ச்சி அம்சங்களுடன் வருடாந்த கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் இசைப்பு

இலங்கை விமானப்படையின் சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் 2021 திங்கட்கிழமை (20) மாலை அத்திடிய ஈகள்ஸ் லேக் ஹோட்டலில் நடைபெற்ற கீதங்கள் இசைக்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷ கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலளார் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சு சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் மற்றும் அவர்களது பாரியார்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் விமானப்படை சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன ஆகியோர் பிரதம அதிதி மற்றும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த சகலருக்கும் அன்புடன் வரவேற்பளித்தனர்.

இந்த நிகழ்வில் விமானப்படையின் பாடகர் குழு மற்றும் அதன் இசைக்குழுவினரால் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதோடு, விமானப் படையின் பதவி நிலை பிரதானி மார்ஷல் ரொஷான் குணதிலக, திருமதி நெலுன் குணதிலக்க, விமானப்படையின் பிரதானி, விமானப்படை உறுப்பினர்கள் குடும்பத்துடன், முன்னாள் விமானப்படைத் தளபதிகள், முன்னாள் விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், இலங்கை விமானப்படை சேவை வனிதையர் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நத்தார் தாத்தாவின் வருகை நிகழ்வை வண்ணமயாக்கியது.

நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் விமானப்படை பாடகர் குழு மற்றும் இசைக்குழுவின் நிகழ்வுகளை மகிழ்வுடன் கண்டுகழித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர், விமானப் படை எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக மற்றும் திருமதி நெலுன் குணதிலக, பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணதிலக அவர்களுடன் பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் நிஷாந்த உலுகாதென்னே,விமானப்படை நிர்வாக சபையின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது பாரியார்களும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவ்வாண்டிற்கான கிறிஸ்மஸ் நிகழ்வுகள் சுகாதார கட்டுப்பாடுகளுனயே இடம்பெற்றிருந்தமையும், நிகழ்வில் பங்குபற்றியவர்கள் சகலரும் அண்டிஜன் பரிசோதனைகளை செய்துகொண்டே நிகழ்வில் பங்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.