Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2021 18:39:12 Hours

சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியில் வெளிநாட்டவர்கள் உள்ளடங்களாக 146 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு

சப்புகஸ்கந்தவிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் எண்-15 பாடநெறியை நிறைவு செய்த, (76) இராணுவ அதிகாரிகள், (25) கடற்படை அதிகாரிகள், (26) விமானப் படை அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நெலும் பொக்குன கலையர்கத்தில் 10 ஆம் திகதி நடைபெற்றது. இவ்விழாவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ருவாண்டா, மாலைதீவு, இந்தோனேசியா, நேபாளம், செனகல் மற்றும் அமெரிக்கா (பீஎஸ்சீ) , சவுதி அரேபியா உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த 146 இளங்கலை பட்டதாரிகளும் கலந்துகொண்டனர்.

இப் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு, இராஜதந்திரிகள், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே (பாதுகாப்பு பதவி நிலை பிரதானி இராணுவ தளபதி அவர்களை பிரதிநிதிதுவப்படுத்தி) , கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகள், நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம், பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் முன்னாள் தளபதிகள் முப்படை அதிகாரிகள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதியால் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள், மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் உள்ளிட்ட நிர்வாகச் சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரி தெரிவு செய்யப்பட்ட பயிலிளவல் அதிகாரிகளின் தொழில்முறை அறிவு மற்றும் புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இங்கு அனைத்து இராணுவ கோட்பாடுகள் மற்றும் மூலோபாய திட்டமிடல்கள் தொடர்பினால் கற்பித்தல்கள் ஆயுத படையினருக்கு ஒரே கூரையின் கீழ் வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் தளபதியவர்ளால் அழைப்பு விடுக்கப்பட்ட அனைவருக்கும் நுழைவாயிலில் வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் அனைவரும் வரிசைக் கிரமமாக கேட்போர்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாடநெறி எண் – 15 ஆனது 11 ஜனவரி 2021 அன்று ஆரம்பிக்கப்பட்டு 10 டிசம்பர் 2021 அன்று நிறைவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பட்டதாரிகளின் துணைவர்கள், பெற்றோர், உறவினர்கள் ஆகியோரும் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி கலந்துகொண்டிருந்தனர்.

இவ்விழாவின் போது பாடநெறியில் சிறந்த திறன்களை வெளிகாட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் நிகழ்வின் பிரதம அதிதி ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன மற்றும் பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியின் தளபதி ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.

வெளிநாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட விருதுகளை பெற்றுகொண்டவர்களின் விவரம் வருமாறு,

மேஜர் கேடி வதுத்துதொர (இலங்கை சிங்கப் படையணி)

மேஜர் ஏபீஎஸ்யூ அபேசேகர (இலங்கை கவச வாகன படையணி)

லெப்டினண் கொமாண்டர் (சீ) எஸ்எச்டீஎஸ் பெர்னாண்டோ (இலங்கை கடற்படை)

லெப்டினண் கொமாண்டர் (பீடபிள்யூஒ) கேகேசீ (இலங்கை கடற்படை)

விங் கொண்டர் கேம்டீபி கனகரத்ன (இலங்கை விமானப்படை)

விங் கொமாண்டர் அபேக்ஷி மிஸ்ரா (இந்தியா)

தங்க பேனை விருது

பாடநெறியின் சிறந்த கட்டளைத் தளபதியின் ஆய்வுக் கட்டுரைக்கான விருது விங் கமாண்டர் H.K.Y.U சோமவன்ச (இலங்கை விமானப்படை) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Golden Owl விருது

ஒவ்வொரு பிரிவிலும் தகுதி வரிசையில் முதல் இடத்தைப் பெற்ற மிகச் சிறந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர் அதிகாரிகளுக்கு பின்வரும் Golden Owl விருது வழங்கப்பட்டது.

வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரி : மேஜர் அபூபக்கர் முருடாஷா பட்டர் (பாகிஸ்தான்)

இலங்கை பயிலிளவல் அதிகாரி : மேஜர் கேடி வதுத்ர (இலங்கை சிங்கப் படையணி)

லெப்டினண் கொமாண்டர் (சீ) எஸ்எச்டீஎஸ் பெர்னாண்டோ (இலங்கை கடற்படை)

விங் கொண்டர் கேம்டீபி கனகரத்ன (இலங்கை விமானப்படை)

விங் கொமாண்டர் அபேக்ஷி மிஸ்ரா (இந்தியா)