Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2021 11:00:33 Hours

கதிர்காமத்தில் மற்றுமொரு குடும்பத்திற்கு வீடு வழங்கி வைப்பு

கதிர்காமம் தேவாலய நிருவாகத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் 12 வது படைப்பிரிவின் 122 பிரிகேடின் கீழுள்ள 23 வது கஜபா படையணியினரால் வெடசிடிகந்த பகுதியில் வசிக்கும் திரு கே.எம் ஜயந்த பிரேமகுமார அவர்களின் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு வழங்கி வைக்கப்பட்டது.

மகா சங்கத்தினரின் ஆசிகளுடன் நவம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக அவர்களினாள் பயனாளிகளுக்கு வீட்டின் சாவி வழங்கி வைக்கப்பட்டது.

அதேநேரம், இந்நிகழ்வில் கலந்துகொண்ட 122வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக்க பல்லேகும்புர அவர்களினால், வீட்டுத் தேவைக்கான பொருட்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக, 122 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக்க பல்லேக்கும்புர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.