Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2021 10:30:33 Hours

முல்லைத்தீவு வீதியோரங்கள் மற்றும் கோவில் வளாகங்களில் சிரமதானம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின்படி டிசம்பர் 4 முதல் 5 வரை முல்லைத்தீவு பொதுப் பிரதேசத்திலும் விஸ்வமடு மற்றும் கண்ணிநகர் பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள இரு சாலையோரங்களையும் சிரமதான பணிகள் இடம்பெற்றன.

பொதுமக்கள் மற்றும் படையினரிடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணிகள் 57 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன மற்றும் 572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால ஆகியோர் இத்திட்டத்தை மேற்பார்வை செய்தனர். 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் அதிகாரிகளுடன் இணைந்து இரண்டு நாட்களில் இத் திட்டத்தினை நிறைவு செய்தனர்.

இதேவேளை, ஒட்டுசுடான் வைத்தியசாலையால் வைத்தியசாலை வளாகத்தை துப்பரவு செய்வதற்கு உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய 61 வது படைப் பிரிவு தலைமையகத்தின் தலைமையில் 641 வது பிரிகேட் சிப்பாய்கள் திங்கட்கிழமை (6) வைத்தியசாலை வளாகத்தை தூய்மையாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தனர். வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமான பொருட்கள் மற்றும் குப்பைகள் காணப்பட்ட நிலையில் புதன்கிழமை (1) 64 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

641 வது பிரிகேடின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளும் அவறற்றின் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் திட்டத்திற்கு பங்களிப்புகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வைத்தியசாலை சிரமதான பணிகளில் 50 இற்கு மேற்பட்ட சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.