Header

Sri Lanka Army

Defender of the Nation

07th December 2021 19:57:50 Hours

இத்தாலிய தூதுவர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலி தூதுவர் அதிமேதகு ரீடா கூலியானா மனெல்லா இன்று (7) காலை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதன்போது, கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வகிபாகம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்ர ஒத்துழைப்புக்கள் மற்றும் புரிந்துணர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அதனையடுத்து ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேற்படி சந்திப்பின் நிறைவில் புதிய தூதுவரின் இராஜதந்திர உறவுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததோடு, நல்லெண்ண அடிப்படையில் நினைவுச் சின்னத்தையும் வழங்கி வைத்தார்.

இதன்போது தூதுவருக்கு இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களால் இராணுவ தலைமையகத்தின் நுழைவாயில் வைத்து வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான இத்தாலி தூதுவரான அதிமேதகு ரீடா கூலியானா மனெல்லா அவர்கள் பிசா பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் பட்டம் பெற்றதை தொடர்ந்து இராஜதந்திர சேவைகளில் இணைந்துகொண்டார். அதேபோல் அவர் நாட்டின் பொருளாதார பிரச்சினைகள், மனித உரிமைகள்,அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட விடயங்களில் பெரும் பங்களிப்பு செய்தவர்.

அவர் புது டில்லியில் முதல் செயலாளராகவும் (வர்த்தகம்), நியூயோர்க்கில் தூதராகவும், பின்னர் ஐநா ரோம் சார்ந்த ஏஜென்சிகளுக்கான (FAO, WFP, IFAD) பிரதி நிரந்தர பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.

இலங்கைக்கு வருவதற்கு முன்னர், அவர் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு மற்றும் பார்வைக்கான பணிப்பாளராக பணியாற்றினார்.