Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2021 10:07:37 Hours

இராணுவத் தலைமையகத்தில் இந்திய இராணுவத் தளபதிக்கு சிறப்பு விருந்து

இலங்கைக்கான ஐந்துநாள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே மற்றும் அவரது பாரியாருக்கு இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியாரும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரால் நேற்று (15) மாலை சிறப்பு விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு விருந்துபசாரத்தை கலாச்சார அம்சங்கள் மற்றும் பொழுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒன்றாக மாற்றியமைப்பதற்கான இலங்கையின் இசைத்துறையை நம்பமுடியாத உயரத்திற்கு கொண்டு சென்றவரான இளம் பாடகர் செல்வி யொஹானி டி சில்வா இந்திய இராணுவ தளபதிக்கான சிறப்பு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும். இந்த நிகழ்வை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய இளம் கலைஞரான யொஹானி டி சில்வா இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல்( ஓய்வு) பிரசன்ன டி சில்வா அவர்களின் மகளாவார் என்பதும் குறிப்பிடதக்கது.

இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய இராணுவ தளபதி இந்திய இராணுவ துனைவியர் நலச் சங்கத்தின் தலைவி திருமதி வீணா நரவனே, இந்திய இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுளுடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வு நினைவுச் சின்ன பரிமாற்றங்களுடன் நிறைவை எட்டியது. இத்திகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மற்றும் அவர்களது துனைவியர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.