Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2021 13:49:03 Hours

இலங்கைக்கு நல்லிணக்க விஜயம் மேற்கொள்ளும் இந்திய இராணுவ தளபதி

(ஊடக அறிக்கை)

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரால் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், ஏடிசி அவர்கள் உள்ளடங்களாக ஐவர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை (12) இலங்கைக்கான ஐந்து நாள் நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்கள் முப்படை சேனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார். அத்தோடு இந்திய உயர்ஸ்தானிகர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்திய இராணுவத் தளபதி அனுராதபுரம் சாலியாபுராவில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (14), நடைபெறவிருக்கும் ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வுகளிலும் பங்குபற்றவுள்ளார். அணிவகுப்பு மரியாதைக்கு முன்னதாக அநுராதபுரம் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் பங்கேற்பதற்க முன்னதாக இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் பயிற்சி பாடசாலையின் சாரதி மற்றும் குறிபார்த்து சுடல் தொடர்பான விளக்கவுரையில் பங்குபற்றுவதுடன் மாதுரு ஓயா சிறப்புப் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வரும் இந்திய இலங்கை கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி' பயிற்சிகளின் இறுதி கட்டங்களையும் பார்வையிடவுள்ளார்.

அவரது விஜயத்தின் போது அவரது பாரியாரும் இந்திய இராணுவ துனைவியர் நலன்புரி சங்கத்தின் தலைவியுமான திருமதி வீணா நவரனே, பொதுப்பணி பணிப்பாளரும் இராணுவ தலைமையக பயிற்சி கட்டளைகள் பணிப்பாளர் ஜெனரல் ரஜீவ் தாப்பர், இந்திய இராணுவ தளபதியின் செயலாளர் மேஜர் ஜெனரல் விக்ராந்த் நாயக், கேணல் மந்தீப் சிங் தில்லோன் ஆகியோர் ஜயஸ்ரீ மகா போதியிற்கு வழிபாடுகளுக்காக செல்லவுள்ளனர்.

வருகை தரும் இந்திய இராணுவ தளபதிக்கு புதன்கிழமை (13) இராணுவத் தலைமையகத்தில் படையினரால் வழங்கப்படும் சிறப்பு மரியாதை அணிவகுப்பிற்கு பின்னர் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை சந்திக்கவுள்ளார்.

அதேபோல் இராணுவ தலைமையகத்திற்கு செல்வதற்கு முன்பாக ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைக்கப்பட்டிருக்கும் போரின் போது உயிர் நீத்த இந்திய வீரர்களின் நினைவுத் தூபிக்கும் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

இந்திய இராணுவ தளபதி தனது இலங்கை விஜயத்தின் நிறைவம்சமாக சபுஸ்கஸ்கந்தாவில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் இளமானி பட்டப்படிப்பை தொடரும் பட்டதாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது இந்திய இராணுவத் தளபதி மற்றும் அவரது பாரியார் திருமதி வீணா நரவனே ஆகியோருக்கு ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது பாரியார் இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரால் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கவுள்ளது.

அதேநேரம் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் திருமதி வீணா நவரனே அவர்களுக்கு தனியொரு வரவேற்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இந்திய இராணுவ தளபதியை பற்றிய சுருக்கமான விவரம் கீழ்வருமாறு:

ஜெனரல் எம்எம் நரவனே, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், ஏடிசி தனது பாடசாலை கல்வியை பூனே ஞான பிரபோதினி பிரசாலாவில் நிறைவு செய்தார். தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய இராணுவ அகாடமியின் பழைய மாணவரான அவர் 1980 ஜூன் மாதம் சீக்கிய இலேசாயுத காலாட்படை படையணியில் பணி நியமனம் பெற்றார். பொது பணி அதிகாரிகளுக்கான முதுகலைப் பட்டம், பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ கற்கைகளில் முதுமானி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக நீடிக்கும் இவரது இராணுவ வாழ்க்கையில், அவர் வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் அமைதி காப்பு படைப்பிரிவுகளில் முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். சவாலான பகுதிகளில் சேவையாற்றிய மகத்தான அனுபவமும் அவருக்கு உள்ளது. அவர் ஒரு ரஷ்த்திரிய ரைபிள்ஸ் அலகின் கட்டளை அதிகாரியாகவும் காலாட் படை பிரிகேட் ஒன்றை நிறுவியவராகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தளபதியாகவும் அசாம் ரைப்பிள் படையின் கண்காணிப்பு நாயகமுமாக செயற்பட்டுள்ளார். அத்தோடு காலாட் படை பிரிகேடின் மேஜராகவும், மியன்மார் யாங்கோனின் பாதுகாப்பு ஆலோசகராகவும் புதுடில்லி இராணுவ போர் பயிற்சி கல்லூரியின் பணிப்பாளராகவும் நியமனம் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் 2017 ஆம் ஆண்டில் இந்திய குடியரசு தின அணிவகுப்புக்கு கட்டளையிடும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். கொல்கத்தா இராணுவ பயிற்சி கட்டளை, சிம்லா மற்றும் கிழக்கு கட்டளைகளின் தளபதியாகவும் நியமனம் வகித்த இவர் 31 டிசம்பர் 2019 அன்று இந்திய இராணுவ தளபதியாக நியமனம் பெற்றார்.