Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2021 18:00:23 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதி அலுவலகத்தை பொறுப்பேற்கிறார்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 47 வது தளபதியாக நியமனம் பெற்றுக்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே செவ்வாய்க்கிழமை (05) சீதாவக்கை கொஸ்கமயில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு நிகழ்வுகள் ஆரம்பமானதோடு, இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு பிரதி தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்கவால் சிரேஸ்ட அதிகாரி வரவேற்கப்பட்டார்.

அதனையடுத்து புதிய தளபதி மத அனுட்டானங்களுக்கு மத்தியில் புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களின் கையொப்பமிட்டார்.

தனது தொடக்க உரையை வழங்கிய அவர், தொண்டர் படையணிக்கான தனது நோக்கத்தை தெரிவித்தார் மேலும் முந்தைய தளபதிகள் மற்றும் அனைத்து சிரேஸ்ட அதிகாரிகளின் சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். தொண்டர் படையணியின் படையினர் தானாக முன்வந்து செயல்பட வேண்டும் எனவும் வகிபங்குகள் மற்றும் பணிகளைச் செயல்படுத்த அனைவரின் ஆதரவையும் வலியுறுத்தினார். மேலும், ஒரு தொழில்முறை இராணுவத்தை நோக்கிச் செல்லும் போது இராணுவத் தளபதியின் இராணுவத்தின் ‘முன்னோக்கிய மூலோபாய திட்டத்திற்கு இணங்க பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அலுவலகத்தை ஏற்கும் விழாவைக் குறிக்கும் வகையில் சிரேஸ்ட அதிகாரி புதிய முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டி வைத்தார். புதிய அலுவலக ஏற்பு விழாவில் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கொவிட் 19 தடுப்பிற்கான சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கலந்து கொண்டனர்.