Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2021 15:28:52 Hours

ஓய்வுபெறும் சிங்கப்படையின் சிரேஸ்ட அதிகாரிக்கு தளபதி பாராட்டு

முன்னாள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமையிட்டு வியாழக்கிழமை (7) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் தளபதியை சந்தித்தார்.

இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இலங்கை சிங்கப்படையினால் உருவாக்கப்பட்ட பெருமை மிக்க வீரரான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்துகொண்ட தளபதி அவரது மூன்று தசாப்த கால இராணுவ செயற்பாடுகளையும் நினைவுகூர்ந்தார்.

அதேபோல் இராணுவத்தின் முன்னோக்கு மூலோபாய திட்டத்தின் கீழ் இராணுவத்தின் வளர்ச்சிக்கான அவரது செயற்பாடுகளையும் தளபதி பாராட்டினார். அதனையடுத்து ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரி தனது சேவைக்காலத்தில் தளபதியிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி கூறியதோடு, தளபதியின் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்புக்கும் நன்றி தெரிவித்தார். ஓய்வுபெறுவதன் நினைவம்சமாக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் சிறப்பு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

மேலும் இவர் விடுதலை புலிகளுடனான போர் நடவடிக்கைகளை தோற்கடிப்பதில் அவர் வழங்கிய பங்களிப்புக்கும் அவரது துணிச்சலுக்கும் வீரத்துக்கும் ரண விக்கிரம பதக்கமும் பெற்றுக்கொண்டுள்ளார். அத்தோடு கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கைக்கான பதக்கம் என்பவற்றையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, 6 வது இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரியாகவும் , 1,9 மற்றும் 12 வது இலங்கை சிங்கப்படைகளில் வெவ்வேறான நியமனங்களையும் வகித்த அவர் பயங்கரவாதிகளுக்கு எதிரான 3 தசாப்த கால யுத்தத்தின் பின்னரான 8 வருட காலப்பகுதியில் 522, 573, 144 மற்றும் 142 பிரிகேட்களின் தளபதியாக நியமனம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.