Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2021 17:48:01 Hours

ஜெர்மன் தூதரக இராணுவ ஆலோசகர் இராணுவத் தளபதியை அழைக்கிறார்

புது தில்லியை தளமாக கொண்ட ஜெர்மனி குடியரசின் இலங்கையுடன் இணைந்த தூதரகத்தின் இராணுவ ஆலோசகர், கேப்டன் ஜெரால்ட் கோச் பிரதிநிதிகள் குழுவுடன் இன்று (4) காலை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்தனர்.

பிரதித் தூதுவர் திரு ஓலாஃப் மல்கோவ், பிரதி பாதுகாப்புத் இணைப்பாளர் லெப்டினன்ட் கேணல் ஜான் சிஹார் மற்றும் அரசியல் மற்றும் நெறிமுறை அதிகாரி திருமதி தாரிணி தளுவத்தே ஆகியோர் அடங்கிய குழுவினர் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

சந்திப்பின் போது, ஜெர்மன் தூதரக தூதர் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இருந்து கொவிட் 19 தொற்றுநோயை ஒழிக்க இராணுவத்தின் தொடர்ச்சியான ஆதரவு பற்றியும் அவர் சாதகமாக பேசினார். இரு இராணுவ அமைப்புகளுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவ பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்த சந்திப்பு எடுத்துரைத்தது.

ஜெனரல் சவேந்திர சில்வா முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்த இராணுவ ஆலோசகருக்கு நன்றி தெரிவித்ததுடன் சந்திப்பின் நினைவுவாக நினைவு பரிசும் வழங்கப்பட்டது.