Header

Sri Lanka Army

Defender of the Nation

01st October 2021 14:38:03 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் சேன வடுகேவின் சேவைக்கு பாராட்டு

இலங்கை இராணுவ தொண்டர் படையணி , இலங்கை இராணுவ பயிற்சி கட்டளை மற்றும் கெமுனு ஹேவா படையணியின் தளபதியாக நியமனம் வகித்திருந்த நிலையில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறவிருக்கும் மேஜர் ஜெனரல் சேன வடுகே அவர்களை வெள்ளிக்கிழமை (01) தனது அலுவலகத்துக்கு அழைப்பித்திருந்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கெமுனு ஹேவா படையணியினரால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த வீரர்களின் ஒருவராக கடந்த மூன்று தசாப்த்த காலமாக இலங்கை இராணுவத்திற்கு அவர் ஆற்றிய சேவையின் நினைவம்சங்களை நினைவுகூர்ந்த தளபதி, அவரது எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டங்களை கட்டமைப்பதற்கான கல்வி சார்ந்த உள்ளீடுகளை இணைக்கும் செயற்பாடுகளில் அவர் வழங்கிய பங்களிப்பின் மூலம் இராணுவத்தின் வளர்ச்சிக்காக அவர் செய்த சேவைக்கும் இராணுவ தளபதி பாராட்டு தெரிவித்தார்.

அதேபோல் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை தோற்கடிப்பதில் அவரது பங்களிப்பு மற்றும் சுய முயற்சிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட துணிச்சலானதும் வீரமிக்கதுமான தீர்மானங்களுக்காக ரண விக்கிரம பதக்கம் (RWP) வடக்கு மனிதாபிமான நடவடிக்கைக்கான விருது, வடக்கு கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான விருது என்பனவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் சேன வடுகே, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி, 9 வது கெமுனு ஹேவா படையின் உதவிப் படைகளின் தளபதி, தியதலாவையிலுள்ள இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட பயிற்சி ஆலோசகர், 5 மற்றும் 7 வது கெமுனு ஹேவா படைகளின் 2 ஆம் கட்டளை அதிகாரி, பிரதி பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பொதுப்பணி அதிகாரி, 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பொதுப்பணி அதிகாரி I, 513,684,232,234 வது பிரிகேடுகளின் தளபதி, இராணுவ கள பயிற்சி கல்லூரி அம்பாறையின் தளபதி, இராணுவ செயலாளர் அலுவலகத்தின் உதவி செயலாளர், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, 52 வது படைப்பிரிவு தளபதி, இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், இயந்திரவியல் மின்சார பொறியியல் படையணியின் படைத் தளபதி உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதனையடுத்து ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரி தனது சேவைக்காலத்தில் தளபதியிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றி கூறியதோடு, தளபதியின் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்புக்கும் நன்றி தெரிவித்ததோடு ஓய்வுபெறுவதன் நினைவம்சமாக சிறப்பு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.